காதலர்கள் கடினமான உரையாடலைக் கையாள்வது எப்படி? சண்டை வராமல் புரியவைப்பது எப்படி?
நம் எண்ணங்களை எவ்வாறு புரியவைப்பது மேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படாத, மிக முக்கியமாக, மற்றவரின் உணர்வுகளைப் புண்படுத்தாத வார்த்தைகளை எப்படி முன்வைப்பது?
உறவுகளில், நமது தேவைகள் மற்றும் இதர எதிர்பார்ப்புகளை தெளிவான வழியில் முன்வைக்கும் சவால்களை நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம். இது ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு உடனடியாக நம் பார்ட்னரிடம் பேசுவதையும், நாம் அந்தத் தருணம் முழுவதும் எதிர்கொண்ட உணர்வுகளை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதையும் உள்ளடக்குகிறது. பிரிந்தாலும், விஷயங்களை வரிசைப்படுத்தவும், இறுதியாக பிரிவை ஆரோக்கியமானதாக்க ஏதுவான கடினமான உரையாடலை நடத்த வேண்டும். நம் எண்ணங்களை எவ்வாறு புரியவைப்பது மேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படாத, மிக முக்கியமாக, மற்றவரின் உணர்வுகளைப் புண்படுத்தாத வார்த்தைகளை எப்படி முன்வைப்பது என்று தெரியாதபோது உறவுகள் பெரும்பாலும் குழப்பமான சூழ்நிலைகளை நம் முன் கொண்டு வருகின்றன.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் மில்லினியல் தெரபிஸ்ட் என்று அழைக்கப்படும் மனநல மருத்துவர் சாரா குபுரிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீன கால பிரச்சனைகள் தொடர்பான தமது பார்வையைப் பகிர்ந்துகொள்வதற்காக அறியப்படுபவர். அவர் இதுபோன்ற உறவுச்சிக்கல்களில் உரையாடும் முறை குறித்து முன்வைக்கும் சில கருத்துகள்...
நோக்கம்: நாம் உரையாடலைத் தொடங்கும் நோக்கத்தை முதலில் வரிசைப்படுத்த வேண்டும். இது ஒரு கடினமான சூழ்நிலை, தீர்க்கப்படாத சம்பவம், வாதம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். நமக்கு இதுதான் பேசவேண்டும் என்கிற நோக்கம் இருக்கும்போது, நம் பார்ட்னருடனான உரையாடலைத் தொடங்க வேண்டும்.
சொல்லவருவதைக் கேட்பது: நம் பார்ட்னர் தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கும் போது அவர்களை கருத்தில்கொண்டு பொறுமையாக இருப்பதும் முக்கியம். அவர்கள் பேசும்போது, நாமும் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், நாமும் அதையே எதிர்பார்க்கிறோம். எனவே, நாம் பதில் சொல்லாமல் அவர்களைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் கேட்க வேண்டும்.
உங்களுக்காகப் பேசுங்கள்: உறவிலிருந்து நாம் எதைப் பெற விரும்புகிறோம் என்பதைப் பற்றிய நமது சொந்த விருப்பங்கள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைவருக்கும் உள்ளன. எனவே நம் கண்ணோட்டத்தில் அதைப் பற்றிப் பேசப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே பேசுதல்: நாம் உணர்ச்சிப்பூர்வமான உரையாடலில் ஈடுபடும்போது, உண்மையான விவாதத்தில் இருந்து கவனத்தை இழக்க நேரிடும். கவனத்தை அப்படியே வைத்திருப்பது மற்றும் அதே நேரத்தில் ஒரு பிரச்சினை அல்லது ஒரு விவாதத்தைக் கையாள்வது முக்கியம்.
இழிவான மொழியைத் தவிர்த்தல்: கத்துவதையும், ஆரோக்கியமற்ற விமர்சனங்களையும், இழிவான மொழியையும் நாம் எப்போதும் தவிர்க்க வேண்டும். இது உண்மையான உரையாடலில் இருந்து கவனத்தை அகற்றி விவாதத்தை நச்சுத்தன்மையடையச் செய்கிறது.
நேரம் முடிதல்: கடினமான உரையாடல்கள் சோர்வாக இருக்கலாம். தேவைப்பட்டால் நேரத்தை ஒதுக்கிவிட்டு, நீங்கள் மீண்டும் அந்த இடத்தில் இருப்பதை உணர்ந்தவுடன் உரையாடலுக்குத் திரும்பவும்.