Herbal Tea | உடல் சோர்வுக்கும், புத்துணர்ச்சிக்கும் இந்த ஹெர்பல் தேநீர்தான் பெஸ்ட்.. ட்ரை பண்ணுங்க..!
டீ பிரியர்கள், எப்போதும் ஒரே மாதிரி தேநீர் எடுத்துக்கொண்டு அலுத்துப்போய் இருப்பீர்கள் . இந்த அலுப்பைக்குறைக்க இதோ உடலுக்கு நல்லது செய்யும் புது டீ வகைகள்..
டீ பிரியர்கள், எப்போதும் ஒரே மாதிரி தேநீர் எடுத்துக்கொண்டு அலுத்துப்போய் இருப்பீர்கள் . இந்த அலுப்பைக்குறைக்க இதோ உடலுக்கு நல்லது செய்யும் புது டீ வகைகள்..
செம்பருத்தி டீ - செம்பருத்தி பூக்களை நிழலில் காயவைத்து எடுத்து வைத்து கொள்ளவும். தேவைப்படும் நேரங்களில் காய்ந்த செம்பருத்தி பூக்களை 1 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக சாயம் இறங்கிய பிறகு, அதை வடிகட்டி, தேன் கலந்து பருகலாம்.
பயன்கள் - இதில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது. உடலில், கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. மன சோர்வு வராமல் தடுக்கும்.
முருங்கை மூலிகை டீ - முருங்கை இலைகளை நன்றாக நிழலில் உலர்த்தி, பொடியாக்கி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், அதில், புதினா இலைகள் ,சீரகம் போட்டு ஒரு கொதி வந்தபிறகு, அதில் இந்த முருங்கை இலை பவுடர் சேர்க்கவும். மீண்டும் நன்றாக கொதிக்க வைத்து, பின்னர் அதை வடிகட்டி , தேவைப்பட்டால், தேன் கலந்து பருகலாம்.
பயன்கள் - இது ஆண்டிஆக்ஸிடென்கள் நிறைந்தது. கால்சியம் சத்து நிறைந்தது. இரு புத்துணர்ச்சியை தரும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள் எடுத்துக்கொண்டால் நல்ல நன்மை தரும்.
இஞ்சி மூலிகை டீ - இஞ்சியை சிறிதாக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் வைத்து அதில் சிறிதாக வெட்டிய இஞ்சியை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். இனிப்புக்காக தேன் கலந்து கொள்ளலாம்.
பயன்கள் - இது செரிமான தன்மையை அதிகமாக்குகிறது. ஏப்பம் அதிகம் வந்தால் இதை எடுத்துக்கொள்ளலாம். வாயு தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு சிறந்தது. இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும்.
பெப்பர்மிண்ட் டீ - ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் புதினா இலைகளை போட்டு, நன்றாக கொதிக்க வைத்து சாயம் இறங்கிய பிறகு, அதை வடிகட்டி, தேன் கலந்து பருகலாம்.
பயன்கள் - இது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். மாதவிடாய் நேரத்தில் வரும் முதுகு வலி , வயிறு வலி அனைத்தையும் குறைக்கும். செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலே சொன்ன அனைத்தும் மிக சிறந்த மூலிகை டீ வகைகள், ஒரு நாளைக்கு அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் இது ஒவ்வொன்றையும் முயற்சி செய்யலாம்.