(Source: ECI/ABP News/ABP Majha)
Weight Loss | டேஸ்ட்டும் இருக்கணும்.. வெய்ட்டும் குறையணுமா.. இதை ட்ரை பண்ணி பாருங்க..!
வெள்ளரிக்காய், வேர்க்கடலை ரெண்டும் சேர்த்து சாலட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. எடையும் அதிகமாகது , ருசியாவும் இருக்கும். நீங்க எடுத்துக்கொள்ளும் டயட்டில் இது ரெண்டையும் சேர்த்துக்கோங்க
வெள்ளரிக்காய் வேர்க்கடலை ரெண்டும் சேர்த்து சாலட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. எடையும் அதிகமாகாது, ருசியாவும் இருக்கும். நீங்க எடுத்துக்கொள்ளும் டயட்டில் இது ரெண்டையும் சேர்த்துக்கோங்க...
சாலட் செய்ய தேவையான பொருள்கள்
வெள்ளரிக்காய் - 1 கப் ( நறுக்கியது )
வேர்க்கடலை - 1 கப் ( முளைகட்டியது)
கொத்தமல்லி - சிறிது ( நறுக்கிய இலைகள் )
வெங்காயம் - 1 ( சிறிதாக நறுக்கியது )
காய்ந்த மிளகாய் - 3 ( விதைகள் நீக்கி சிறிதாக நறுக்கி கொள்ளவும் )
எலுமிச்சை சாறு - சிறிது (ருசிக்காக )
தேன் - சிறிது
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முளைகட்டிய வேர்க்கடலையை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, விதை நீக்கிய காய்ந்த மிளகாய் போட்டு ஒன்றாக கலந்து, அதனுடன், எலுமிச்சைச்சாறு, தேன், ஆலிவ் எண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
- வேர்க்கடலை மற்றும் வெள்ளரிக்காய் சாலட் தயார்.
வெள்ளரிக்காய் நார்சத்து மற்றும் தண்ணீர் சத்து நிறைந்த ஒரு காய். குறைந்த கலோரி கொண்டது. டயட் எடுத்து கொள்ளும் போது எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கூட, உங்களுக்கு பிடித்த மாதிரி வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிடலாம். நிலக்கடலை புரத சத்து நிறைந்தது. இது அமினோ அமிலங்கள் நிறைந்த உணவு. தினம் உணவில் நிலக்கடலை எடுத்துக்கொள்வது, அன்றாடம் தேவையான புரதச்சத்தை தருகிறது. நிலக்கடலை முளைகட்டி வைத்து இன்னும் சிறந்தது.
வெங்காயம், கொத்தமல்லி ஆகியவை ஆண்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது.
ஆலிவ் எண்ணெய் உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பு சத்து நிறைந்து இருக்கிறது. தினம் உணவில் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து கிடைக்கும்.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். ஆனால் கலோரி குறைவாக இருக்கும். எடுத்து கொள்ளும் உணவு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும். வேர்க்கடலை மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து எடுத்துக்கொள்வது, வயிற்றுக்கு நிறைவாகவும், நீண்ட நேரம் பசி எடுக்காமலும், எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாமலும், இருக்கும்.
டயட் எடுத்து கொள்கிறோம் என்று இல்லாமல், ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு உடல் எடை எளிதாக குறைத்துக்கொள்ளலாம்.