கண்ணான கண்ணே..! கண் பார்வையின் ஆரோக்கியத்துக்கு சில நச் டிப்ஸ்!

செல்போன், கம்யூட்டர்,சரியான தூக்கமின்மை, உணவு முறைகளில் மாற்றம் என பல காரணங்கள் கண் பார்வையை பாதிக்கின்றன. கண்பார்வையை ஆரோக்கியமாக நம்மால் வைத்துக்கொள்ள முடியும். நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களும் உண்டு.

வயதானால் கண்பார்வை குறையும் என்று சொல்வார்கள். அந்த பேச்சல்லாம் இப்போது இல்லை. இப்போதைய தலைமுறையின் வாழ்க்கைமுறை மாறி வருவதால் இளம் வயதிலேயே கண்பார்வை குறித்த பிரச்னைகள் எழுத்தொடங்குகின்றன. சரி, கண்பார்வையை எப்படி பாதுகாப்பது? பார்க்கலாம்.


சரியான ஊட்டச்சத்து:


சத்துகளுக்கு சாப்பிடாமல் வயிற்றை நிரப்ப சாப்பிடுவதும், துரித உணவுகள் போன்ற ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதுமே இன்றைய தலைமுறை வெகுவிரைவாக கண்பார்வை தொடர்பான பிரச்னைக்கு உள்ளாகின்றனர். உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட சத்து தேவைப்படுகிறது. அதுபோலத்தான் கண்ணுக்கும் அனைத்துவிதமான சத்துக்களும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ ஆகிய சத்துகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கண்ணான கண்ணே..! கண் பார்வையின் ஆரோக்கியத்துக்கு சில நச் டிப்ஸ்!


கேரட், பப்பாளி, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல்லிக்காய், எலுமிச்சை,ஜாதிக்காய்,வெள்ளரிக்காய்,பீன்ஸ் போன்ற காய்கறிகள் முக்கியம் இடம் பெற வேண்டும். மற்ற பச்சை காய்கறிகளும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோக, பசலைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள் கண் பார்வையை சீராக வைத்திருக்கின்றன. செறிவூட்டப்பட்ட தானிய வகைகள், சிறிய மீன்கள் போன்ற கடல் உணவுகள், பெர்ரி, கொய்யா, ஆரஞ்சு, கிவி போன்ற பழ வகைகளும் கண் பார்வைக்கு முக்கியமானதாகும்.


கண்ண சிமிட்டுங்க:


கண் சிமிட்டுதல் என்பது ஏதோ தேவையற்ற செயல்பாடு அல்ல. இயற்கையாகவே கண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு பயிற்சி. சரியான இடைவெளியில் நாம் கண் சிமிட்டும் போது நம் கண்களுக்கு தேவையான சில ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெறுகின்றன. அதனால் கண் சிமிட்டுதலை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். 


சூரிய ஒளி:
காலை மற்றும் மாலை சூரிய ஒளியிலும் ஊட்டச்சத்து உள்ளது. நம் கண்களுக்குள் உள்ள பல நரம்புகளுக்கு சூரிய ஒளியின் ஊட்டச்சத்து புத்துயிர் அளிக்கிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் நம் முகத்தில் சூரிய ஒளி நன்கு பட வேண்டும். கண்ணான கண்ணே..! கண் பார்வையின் ஆரோக்கியத்துக்கு சில நச் டிப்ஸ்!


வெள்ளரிக்காய் ட்ரிக்:
அழகு நிலையங்களுக்கு சென்றால் வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி மூடிய கண்களுக்கு மேல் வைத்திருப்பார்கள். அதுவும் கண்களுக்கான ஒரு தேவை தான்.
வெள்ளரிக்காய் உண்பது மட்டுமல்ல வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைப்பதும் நல்லதைத் தரும். நன்கு கழுவிய குளிர்ச்சியான வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி 10 நிமிடங்கள் கண்களுக்கு மேல் வைத்தால் கண்கள் குளிர்ச்சியாகும். கண்களில் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வழிதல் போன்ற பிரச்னைகளுக்கு வெள்ளரிக்காய் ட்ரிக் நல்லது. நீண்ட நேரம் கம்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள், செல்போன் பயன்படுத்துபவர்கள் வெள்ளரிக்காய் ட்ரிக்கை அடிக்கடி செய்வது நல்லது.கண்ணான கண்ணே..! கண் பார்வையின் ஆரோக்கியத்துக்கு சில நச் டிப்ஸ்!


20-20-20 பயிற்சி:
உங்கள் வேலை கம்யூட்டரில் என்றால் 20-20-20 பயிற்சி மிக முக்கியம். நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களும், வீடியோ கேம் ஆடுபவர்களுக்கும் இந்த பயிற்சி  தவிர்க்க கூடாதது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகள் கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் கண்களுக்கு ஓய்வு அளித்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது.


அடிக்கடி கழுவுங்க:
நல்ல சுத்தமான  நீரில் கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். தண்ணீரானது கண்களுக்கான ஸ்ரெசை குறைத்து புத்துணர்ச்சியை தருகிறது.இதை தினமும் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கம்யூட்டர் , செல்போன் பயன்படுத்துவோர் மறக்கவே வேண்டாம்.கண்ணான கண்ணே..! கண் பார்வையின் ஆரோக்கியத்துக்கு சில நச் டிப்ஸ்!


புகை நமக்கு பகை:
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கே கேடுதான். அதில் ஒரு கேடு கண்களுக்கு. புகைப்பிடிப்பதால் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பார்வை கோளாறு  உண்டாகிறது. நீங்கள் புகைப்பிடிப்பவராய் இருந்தால் உடனடியாக நிறுத்துங்கள்.


தூக்கம்:
தூக்கம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமே ஓய்வு தான். தூக்கம் என்றால் பகலிலோ அல்லது நடு இரவில் தூங்குவதோ இல்லை. சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழும்  தூக்கம் வேண்டும். ஒரு ஆழ்ந்த நல்ல தூக்கம் கண்களுக்கு முழு ஓய்வை அளித்து புத்துணர்ச்சி அளிக்கிறது. அடுத்த நாளை சிறப்பாக தொடங்க நல்ல தூக்கம் கைகொடுக்கிறது.

Tags: eyesight eyesight tips improve eyesight eyesight tips good eyesight tips vision good vision suggestions

தொடர்புடைய செய்திகள்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2:  இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’  நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

Bra: கயிறு முதல் கார்செட்கள் வரை - ப்ரா பயன்பாட்டுக்கு முன்பு நடந்தது என்ன? : இது ப்ராக்களின் கதை (பகுதி 2)

Bra: கயிறு முதல் கார்செட்கள் வரை - ப்ரா பயன்பாட்டுக்கு முன்பு நடந்தது என்ன? : இது ப்ராக்களின் கதை (பகுதி 2)

Green Tea Benefits | கொரோனாவை கட்டுப்படுத்துமா க்ரீன் டீ? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

Green Tea Benefits | கொரோனாவை கட்டுப்படுத்துமா க்ரீன் டீ? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!

கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு