Water Melon Sherbat: அட தர்பூசணியை இப்படியும் பயன்படுத்தலாமா? செம்ம சர்பத்! ட்ரை பண்ணி பாருங்க
ஜில்லுனு சுவையான தர்பூசணி சர்பத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தர்பூசணி - பெரிய துண்டு 1
கடல் பாசி - 15 கிராம்
ரோஸ் சிரப் - 6 ஸ்பூன்
சர்க்கரை - 2 ஸ்பூன்
பால் -அரை லிட்டர்
சப்ஜா விதை - 2 ஸ்பூன்
ஐஸ் ஸ்கியூப் - 2
செய்முறை
ஒரு நான் ஸ்டிக் பானை(non stick pan) அடுப்பில் வைத்து அதில் 300 மிலி தண்ணீர் ஊற்றவும். அதில் 15 கிராம் கடல் பாசியை சேர்க்கவும். 3 ஸ்பூன் ரோஸ் சிரப் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். கடல் பாசி கரைந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும். இதை ஒரு குட்டி ட்ரேவில் வடிக்கட்டி ஆறியதும் ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். இப்போது இதை செட் ஆகி இருக்கும் இதை எடுத்து கத்தியால் செவ்வக வடிவில் துண்டுகளாக்கி கொள்ளவும்.
திக்கான அரை லிட்டர் குளிர்ந்த பாலை ஒரு கப்பில் சேர்க்கவும். ( பாலை முன்னதாகவே காய்ச்சி ஆற வைத்து பின் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து எடுத்துக் கொள்ளலாம்) இதனுடன் 3 ஸ்பூன் ரோஸ் சிரப், இரண்டு மூன்று ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த 2 ஸ்பூன் சப்ஜா விதைகளையும் பாலில் சேர்க்க வேண்டும். சிறிது தர்பூசணி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி இதில் சேர்க்க வேண்டும். நாம் தயார் செய்து வெட்டி வைத்துள்ள ஜெல்லி துண்டுகளையும் இதில் சேர்த்து கலந்து விட வேண்டும். இதை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பறிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இந்த பானம் இஃப்தார் நோன்பிற்கும் வெயிலுக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
தர்பூசணியின் நன்மைகள்
தர்பூசணியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியின் வளர்ச்சிக்கும் தர்பூசணி உகந்தது. இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
தர்பூசணி குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தர்பூசணியை தயங்காமல் சாப்பிடலாம்.
தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று சொல்லப்படுகின்றது. பற்களை வெண்மையாக்கவும் உதட்டு வெடிப்பை தடுக்கவும் தற்பூசணி உதவும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
Ghee Pumpkin : நெய் பூசணிக்காய் ரெசிபி.. இப்படி செய்தால் கூடுதலா சாப்பாட்டை காதலிப்பீங்க..