(Source: ECI/ABP News/ABP Majha)
Matar Masala Curry: நாண், சப்பாத்திக்கு சூப்பர் காம்போ.. அசத்தலான மலாய் வெந்தயக்கீரை பட்டாணி ரெசிப்பி இதோ..
நாண் சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையான மலாய் வெந்தயக்கீரை பட்டாணி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சப்பாத்தி நாண் ஆகியவற்றுடன் ஒரே மாதிரியான கிரேவிகளை வைத்து சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்போது நீங்கள் இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.
மலாய் வெந்தயக்கீரை பட்டாணி ரெசிபியை மிக குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விட முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மசாலா அரைப்பதற்கான பொருட்கள்
நெய் -ஸ்பூன்
எண்ணெய் - 1ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு- சிறிதளவு
சீரகம்- 1/2 ஸ்பூன்
பூண்டு - 7 பற்கள் பெரியது
இஞ்சி 1 துண்டு- நறுக்கியது
பச்சை மிளகாய் -5 நறுக்கியது
முந்திரி பருப்பு -8
வெங்காயம் -3 நறுக்கியது
கிரேவி தயாரிக்க தேவையானவை
வெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
வெந்தயக்கீரை- 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
வேகவைத்த பச்சை பட்டாணி - 1 கப்
ப்ரெஷ் க்ரீம் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
கசூரி மேத்தி- சிறிதளவு
செய்முறை
முதலில் கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
இதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு சீரகம் சேர்த்து 30 நொடி வதக்கிய பின், பூண்டு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இந்த கலவை ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெந்தயக்கீரை வேகவைத்த பட்டாணி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்து விட வேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து , முந்திரி, பூண்டு ஆகியவை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள கலவையை இதில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
இதில் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட்டு, பிறகு வதக்கி வைத்துள்ள வெந்தயக்கீரை, பச்சைப் பட்டாணியை இதனுடன் சேர்க்க வேண்டும்.
பின்னர் பிரெஷ் க்ரீம் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு, கடாயை மூடி 5 முதல் 6 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும். குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். கடைசியாக கசூரி மேத்தியை நசுக்கி இதில் சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான மலாய் வெந்தய கீரை பட்டாணி ரெசிபி தயார்.
மேலும் படிக்க
Plantain Podimas : சாதத்துக்கு தொட்டு சாப்பிட, சூப்பரான வாழைக்காய் பொடி மாஸ்.. இதோ ரெசிப்பி.
Corn Pakoda: மொறு, மொறு சோள பக்கோடா! ஈசியா செய்யலாம் - செய்முறை இதோ!