Amla Thokku: வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் தொக்கு.. இப்படி செய்தால் சுவை வேற லெவலில் இருக்கும்!
சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் அதில் அரை கிலோ பெரிய நெல்லிக்காயை சேர்க்க வேண்டும். கால் கிலோ பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். இதை மூடிப்போட்டு ஒரு விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
இதை ஒரு இரவு முழுவதும் அல்லது எட்டு மணி நேரம் அப்படியே மூடி வைத்து விட வேண்டும்.
பிறகு தண்ணீரில் இருக்கும் நெல்லிக்காய் மற்றும் பச்சை மிளகாயை மட்டும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த தண்ணீரை வீணாக்கி விடாமல் இதில் ரசம் வைக்கப் பயன்படுத்தலாம். அல்லது ஏதேனும் குழம்பு வைக்க இந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே இந்த தண்ணீரில் உப்பு இருப்பதால் அதற்கேற்றவாறு உப்பு பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் நெல்லிக்காயில் இருக்கும் கொட்டைகளை நீக்கி கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்க்கவும். பொரிந்ததும். 15 பூண்டு பற்கள் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். பூண்டு வதங்கியதும் ஊற வைத்து எடுத்து வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் பச்சை மிளகாயை இதில் சேர்த்துக் கொள்ளவும்.
இதை ஒரு நிமிடம் வதக்கி விட்டு, 3 ஸ்பூன் அளவு மிளகாய்த்தூள் சேர்க்கவும். கூடவே ஒரு ஸ்பூன் அளவு உப்பு அல்லது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை நன்றாக ஒரு நிமிடம் கிளறி விடவும்.
பின் நம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களை அரைத்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்துக் கொள்ளலாம்.
அவ்வவுதான் சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார். இதை பாட்டிலில் அடைத்து வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க
Peanut Dosa :தோசை மாவு இல்லையா? ஆரோக்கியமான வேர்க்கடலை தோசை.. காரச்சட்னி : இப்படி செய்து அசத்துங்க!
Vermicelli Kesari: சேமியாவில் சூப்பர் கேசரி! இப்படி செய்தால் பாத்திரம் நிமிடத்தில் காலி ஆகிடும்!