Cooking And Kitchen Tips: தேங்காய் ஃப்ரெஷ் ஆக இருக்க... சாம்பாரின் சுவை அதிகரிக்க.. சூப்பர் சமையல் குறிப்புகள்!
உடைத்த தேங்காய் ஃப்ரெஷ் ஆக இருக்க, சாம்பாரின் சுவையை அதிகரித்தல் உள்ளிட்ட சமையல் டிப்ஸ்களை பார்க்கலாம்.
நாம் ஒரு சில சிறிய டிப்ஸ்களை பயன்படுத்தி சமையலை மேலும் சுவையாக மாற்றி விட முடியும். அப்படிப்பட்ட பயனுள்ள சமையல் மற்றும் கிச்சன் குறிப்புகளைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகின்றோம்.
உடைத்த தேங்காய் ஃப்ரெஷ் ஆக இருக்க
உடைத்த தேங்காயை இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதன் மேல் பகுதிகளில் அழுகியது போல் மாறி விடும். இப்படி ஆகாமல் உடைத்த தேங்காய் ஃப்ரெஷ் ஆக இருக்க வேண்டுமென்றால் தேங்காயின் மீது சில துளி தேங்காய் எண்ணெய்யை தடவி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். தேங்காயின் அனைத்துப் பகுதிகளிலும் எண்ணெய் படும்படி எண்ணெய் தடவ வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் தேங்காய் ஃப்ரெஷ் ஆகவே இருக்கும்.
ஃபாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமலிருக்க
ஃபாஸ்தா சமைக்கும் போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வர தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது உப்பு மற்றும் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பின் அதில் ஃபாஸ்தாவை சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்து விட வேண்டும். (சுடு தண்ணீரில் சேர்ப்பதற்கு முன் ஃபாஸ்தாவை கழுவி விட்டு சேர்க்க வேண்டும். ) இப்படி செய்வதன் மூலம் ஃபாஸ்தா சமைத்ததற்கு பின்னரும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.
சாம்பார் சுவையாக இருக்க
சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அரிசி கழுவிய தண்ணீரில் வேக வைக்க வேண்டும். அரிசியை முதல் முறை கழுவிய தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டும். இரண்டாவது முறை அரிசி கழுவிய தண்ணீரை பருப்பு வேக வைக்க பயன்படுத்த வேண்டும். வழக்கம் போல் நீங்கள் பருப்புடன் சேர்க்கும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ளலாம். அதே போன்று சாம்பாருக்கு புளி ஊற வைக்கும் போது அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்து புளி கரைசல்ல் தயார் செய்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சாம்பாரின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் இதன் சுவை உங்களுக்கு பிடித்து போகும்.
மேலும் படிக்க
Ragi Idiyappam:கால்சியம் சத்து நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்... இப்படி செய்தால் பெர்ஃபெக்ட்டா வரும்!
Jelli: வீட்டிலேயே சுவையான ஜெல்லி ஈசியாக செய்யலாம்... செய்முறை இதோ!
Peri Peri Pasta: பாஸ்தா க்ரேவிங்கா? பெரி பெரி பாஸ்தா ட்ரை பண்ணுங்க - ரெசிபி இதோ!