மேலும் அறிய
Advertisement
Stuffed Papad Rolls :சுவையான அப்பளம் ரோல்ஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்...
சுவையான அப்பளம் ரோல்ஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
அப்பளம் ரோலிங் ரெசிபி மிகவும் சுவையான ரெசிபி. இந்த ரெசிபியை மிக எளிமையாக செய்து விடலாம். இது மாலை நேரத்தில் சுவைக்க ஏற்ற ஸ்நாக் ரெசிபி. குடை மிளகாய், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை கொண்டு செய்யப்பட்ட ஸ்டஃபிங் கலவை இந்த ரெசிபியை மேலும் சுவையாக்கும். வாங்க அப்பளம் ரோல்ஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 6 நடுத்தர அளவிலான பாப்பாட்கள்
- ஆழமாக வறுக்க எண்ணெய்
- ( For stuffing)
- 4 வேகவைத்த உருளைக்கிழங்கு
- 1 பச்சை குடைமிளகாய், இறுதியாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 2 பூண்டு பற்கள் பொடியாக நறுக்கப்பட்டது,
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள், இறுதியாக நறுக்கியது
- 1 தேக்கரண்டி சாட் மசாலா
- 1/2 தேக்கரண்டி சீரகம் (ஜீரா) தூள்
- 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி (தானியா) தூள்
- 1/2 டீஸ்பூன் மாங்காய் தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
-
- ருசிக்க உப்பு
செய்முறை
1. முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.2. பின் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, சாட் மசாலா, தனியா தூள் உள்ளிட்டவற்றை அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும்.2.ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து அதில் ஒரு அப்பளத்தை மெதுவாக சில நொடிகள் நனைத்தெடுத்து அதை ஒரு தட்டையான மேற்பரப்பில் வைக்க வேண்டும். அப்பளத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற சுத்தமான துணியைப் பயன்படுத்த வேண்டும்.3. ஸ்டஃபிங் செய்ய தயாரித்து வைத்துள்ள கலவையில் ஒரி ஸ்பூன் அளவு எடுத்து அப்பளத்தின் நடுவே வைக்க வேண்டும். இபோது அப்பளத்தை உருளை வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும். அப்பளத்தின் அனைத்து விளிம்புகளையும் நன்றாக மூட வேண்டும்.4.மீதமுள்ள அப்பங்களும் இதே முறையில் கலவையை ஸ்டஃப் செய்ய வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ரோல்களை பொன்னிறமாக வறுக்கவும். பச்சை சட்னி மற்றும்/ அல்லது கெட்ச்அப்புடன் சூடாக பரிமாறவும்.மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஜோதிடம்
பிக் பாஸ் தமிழ்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion