Sani Vakra Nivarthi Palangal: சனி வக்கிர நிவர்த்தி! மகர, கும்ப ராசிக்காரர்களே உஷாரா இருங்க! மீனத்துக்கு எப்படி?
Sani Vakra Nivarthi 2023 Palangal: சனி வக்கிர நிவர்த்தி இன்று(நவம்பர் 4-ஆம் தேதி) நடந்துள்ளதால் மகரம், கும்பம் மற்றும் மீன ராசியினரின் பலன்களை கீழே விரிவாக காணலாம்.
Sani Vakra Nivarthi Peyarchi 2023: ஒருவரின் வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரும் பகவனாக சனி பகவான் உள்ளார். அதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சி நிகழும்போதும் பலரது வாழ்விலும் தாக்கங்கள் ஏற்படுகிறது. இந்த சூழலில் இன்று சனி வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஒவ்வொரு ராசியிலும் பலவித மாற்றங்கள் ஏற்பட உள்ளது.
மகர ராசி : 65% நிதானம் தேவை
அன்பார்ந்த மகர ராசி நேயர்களே,
உங்களுடைய ராசி அதிபதி சனிதான், இரண்டாம் வீட்டின் அதிபதியும் சனிதான். ராசி அதிபதி சனி என்பதால், உங்களுக்கு இயற்கையாகவே சனி பகவான் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார், என்றாலும் ஏழரை சனியின் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் உங்களுக்கு பலன்கள் கொடுப்பதில் சற்று தாமதத்தையே உருவாக்குவார். கும்பத்தில் வக்கிரம் பெற்று ராசியை நோக்கி வந்து கொண்டிருந்த சனி பகவான் தற்போது வக்கிர நிவர்த்தி அடைந்து மீண்டும் கும்பத்தில் சஞ்சாரம் செய்வது நல்ல பலன்களையே கொடுக்கும்.
உதாரணத்திற்கு குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் குடும்ப மேன்மையை ஏற்படுத்துவார். இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக நான்காம் வீட்டை பார்ப்பதால், வீடு வண்டி வாகனங்களில் முன்னேற்றம் ஏற்படும், பண வரவு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். குடும்பத்தார் உங்கள் பேச்சை கேட்பார்கள். நிதானமாக நடந்து கொள்வீர்கள். நன்மை தீமை எது என்பதை பிரித்துப் பார்ப்பீர்கள். இரண்டாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்தை பார்ப்பதால், திடீர் தன வரவு உண்டு. தாராளமாக செலவு செய்யும் மனப்பான்மை ஏற்படும்
சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும், கலைத்துறையினருக்கு ஏற்றமான காலகட்டம். மூன்றாம் இடத்தில் ராகு, இரண்டாம் இடத்தில் சனி அற்புதமான பலன்களை வாரி வழங்குவார் அரசாங்க உத்தியோகத்திற்கு காத்திருப்போருக்கு கண்டிப்பாக கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்த கேது உங்களை அரசு பதவிகளில் அமர வைப்பார். மகர ராசிக்கு பாத சனியாக வருவதால் நடந்து செல்லும் போது காலில் அடிப்பட வாய்ப்பு உண்டு. இரண்டாம் இடத்தில் அமர்ந்து பத்தாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானத்தை பார்ப்பதால் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள். புதிய, புதிய காரியங்களை தொடங்குவீர்கள், குடும்ப மேன்மை அடையும். கையில் சேமிப்பு இருக்கும். சிறு, சிறு உடல் உபாதைகள் வந்தால் அதை மருத்துவரிடம் காண்பித்து சரி செய்து கொள்வது நல்லது. முகம் கண் காது மூக்கு போன்ற விஷயங்களில் நோய் தொற்று பரவக் கூடும். எச்சரிக்கையாக இருங்கள் ஏழரை சனியின் பாதிப்பு விலகும் பொழுது உங்களுக்கு பூரணமாக விடிவு காலம் என்று கூறலாம். சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம் வெற்றி உறுதி வாழ்த்துக்கள் .
அதிர்ஷ்டமான நிறம் : கருப்பு
அதிர்ஷ்டமான எண் : 5,6
வணங்க வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர் வழிபாடு
கும்ப ராசி : 65% காரியத்தில் கவனம் தேவை
கும்ப ராசிக்கு ராசியாதிபதி சனி பகவான் ராசியிலேயே அமர்வதால் மன இறுக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு மனச்சோர்வினால் கவலை உண்டாக வாய்ப்புண்டு. ஏதோ ஒரு விதமான அழுத்தம் இருக்கும் படபடப்பாக இருப்பீர்கள். இரண்டாம் இடத்தில் இருக்கும் ராகு குடும்பத்தில் சில சலசலப்புகளை உருவாக்குவார். அடுத்தவர் என்ன பேசினாலும் அமைதியாக நீங்கள் செல்வது நல்லது.
யாரோ உங்களை பத்து கயிறு வைத்து கட்டி போட்டது போல உணர்வீர்கள். உங்கள் வீட்டிற்கு 12 ஆம் அதிபதியும் சனி பகவான் லக்னத்திலேயே அமர்வதால் நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொள்வீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள் வீட்டில் சுப விசேஷங்களுக்காக செலவுகள் வரலாம் இருப்பினும் அது சுபச்சலமாகவே அமையும். ஜென்ம சனியின் காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. பேச்சில் கவனம் தேவை அடுத்தவரிடத்தில் பேசும் போது நிதானமாக பேசுங்கள். ராசியாதிபதி ஜென்மத்தில் இருப்பதால் புகழ் கூடும். மதிப்பு மரியாதை உயரும் .புது தொழில் தொடங்குவீர்கள். புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஜென்ம சனி யின் ஆதிக்கத்தில் இருக்கும் நீங்கள் எடுத்த காரியத்தை பொறுமையோடு நகர்த்தி செல்வது நல்லது.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான எண் : 3,5
வணங்க வேண்டிய தெய்வம் : குரு பகவான்
மீன ராசி : 90% வெற்றி உறுதி
அன்பான மீன ராசி நேயர்களே,
சனிபகவான் 12ம் இடத்தில் வக்கிரம் பெற்று தற்போது வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனிபகவான் உங்களுக்கு லாபாதிபதி மற்றும் விரையாதிபதி. அனைத்தையும் வாரி வழங்குபவர் சனியே, ஆகையால் ஏழரைச் சனியின் ஆரம்ப காலமாக இருந்தாலும் கூட சனி உங்களுக்கு நல்லதையே செய்யப் போகிறார். புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பார். இருக்கும் இடத்திலிருந்து உங்களை நகர்த்திச் செல்வார். சுப காரியங்களில் ஈடுபட போகிறீர்கள்.
நிம்மதியான உறக்கம் உங்களுக்கு உண்டு. எதிர்பார்த்த லாபத்தை விட இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். லாபாதிபதியான சனி பனிரெண்டாம் இடத்தில் இருப்பதால் சுபச் செலவுகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பதால் வேகமாகவும் துடிப்பாகவும் இருப்பீர்கள். அந்த வேகத்திற்கு தீனி போடும் வகையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் அமர்ந்து நினைத்த காரியத்தை வெற்றி அடைய செய்யப் போகிறார்.
நீண்ட நாட்களாக காத்திருந்த ஒன்று தற்போது நிறைவேற போகிறது. பொலிவு கூட போகிறது. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை பார்ப்பதால் வெற்றியடைய போகிறீர்கள். ஆறாம் வீட்டை சனி பார்ப்பதால் நோய் கடன் தீர போகிறது. வேலையில் முன்னேற்றம், புதிய வேலைவாய்ப்புகள், பெயர் புகழ் பதவி கிடைக்கப் போகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த ஒன்று தற்போது நிறைவேற போகிறது.
அயல்நாடு அயல் தேசம் சென்று வருவீர்கள். அயன சயன சுக ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் எதிலும் வெற்றியே, செலவாய் இருந்தாலும் சுபச் செலவுகளே மனதிற்கு இனிமையான காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டு. மனைவி வழியில் சற்று ஆதரவு குறைந்து காணப்பட்டாலும், அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் கேது இருப்பதால் எதிலும் வெற்றி அடையும் மீன ராசி அன்பர்களே, இந்த ஏழரை சனியின் ஆதிக்கத்தையும் வெற்றி கொள்ள போகிறீர்கள். பொன் சிரிப்புக்கு சொந்தக்காரர் நீங்கள். சுலபமான வெற்றியை எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள்.
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான எண் : 3
வணங்க வேண்டிய தெய்வம் : குரு பகவான்