News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Pumpkin Puli Kulambu: மஞ்சள் பூசணிக்காயில் ஒரு சுவையான புளிக்குழம்பு செய்யலாம்.. செய்முறை இதோ

மஞ்சள் பூசணிக்காயை வைத்து சுவையான புளிக்குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

FOLLOW US: 
Share:

புளிப்பு சுவை அதிகமானோருக்கு பிடித்தது. நாவில் பட்ட உடன் சுவை மொட்டுக்களை சிலிர்க்க செய்யும் புளிப்பு சுவையை யாருக்கு தான் பிடிக்காது. புளிப்பு மிட்டாய், மிளகாய்தூள் தூவிய மாங்காய், புளிசாதம் போன்றவற்றை புளிப்பு சுவையை அதிகம் விரும்புபவர்கள் தான் தேடி தேடி சாப்பிடுகின்றனர். இப்போது நாம் மஞ்சள் பூசணிக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று தான் பார்க்க போறோம். 

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன், புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு, வெங்காய வடகம் - 6 துண்டு, சின்ன வெங்காயம் - 15, மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன், வெல்லம் - ஒரு சிறு துண்டு, மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், பூண்டு - 6 பல்,  தக்காளி - 1 (நறுக்கியது),மஞ்சள் பூசணிக்காய் - 2 கப் , மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்க வேண்டும். பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து  வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடிப்பதம் வந்ததும், அதில் தக்காளி மற்றும் துண்டுளாக நறுக்கிய பூசணிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் மல்லித் தூள்,  மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

இப்போது புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் அடுப்பை குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் இதில் சிறு வெல்லத்துண்டை சேர்த்து கிளறி விட்டு இரண்டு நிமிடத்திற்கு பின் இறக்கினால் சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு ரெடி.

மஞ்சள் பூசணியின் நன்மைகள் 

மஞ்சள் பூசணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் மஞ்சள் பூசணி ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மஞ்சள் பூசணி ஒரு நல்ல மலமிளக்கியாக செயல்படும் என்று கூறப்படுகிறது. 

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் பூசணி ஜூஸ் குடிப்பது நல்ல பலன் தரும் என்று கூறப்படுகிறது.  

பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் படிக்க

CM MK Stalin: நபிகள் நாயகரின் போதனைகள், அறிவுரைகள் பொன்னை போல் பாதுகாக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்..

‘டெல்லி சென்று திரும்பிய தமிழக எம்.பிக்களுக்கு திடீர் காய்ச்சல்’ தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை..!

Published at : 27 Sep 2023 03:31 PM (IST) Tags: pumpkin puli kulambu puli kulambu pumpkin puli kulambu recipe

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!