Plantain Podimas : சாதத்துக்கு தொட்டு சாப்பிட, சூப்பரான வாழைக்காய் பொடி மாஸ்.. இதோ ரெசிப்பி..
சுவையான வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.. சாதத்துக்கு இது சூப்பரான காம்பினேஷன்..
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 1
பச்சை மிளகாய் - 2
உளுந்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கடுகு - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் 2 சிட்டிகை
சின்ன வெங்காயம் - 8
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1 வாழைக்காயை 2-ஆக வெட்டி தண்ணீரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழைக்காய் வெந்தவுடன் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரைத்த வாழைக்காயுடன் சிறிது உப்பு மற்றும் 3 டீஸ்பூன் தேங்காய் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
உளுந்தம் பருப்பு பொன்னிறமானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
இதனுடன் சிறிது உப்பு சேர்த்து, துருவிய வாழைக்காய் கலவையை சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்துவிட்டு, 2-3 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொடி மாஸ் தயார்.
மேலும் படிக்க
சுரைக்காயில் சுவையான கபாப் செய்யலாம் தெரியுமா? இந்த மாதிரி செய்து பாருங்க சூப்பரா இருக்கும்