Mango Phirni: ஸ்வீட் க்ரேவிங்ஸ் - இதோ மாம்பழ பிர்னி செய்து சாப்பிடுங்க! ரெசிபி!
Mango Phirni: மாம்பழ பிரியர்களாக இருந்தால் இந்த ரெசிபிகளை செய்து பாருங்கள். இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் ஆரோக்கியமான முறையில் இதை செய்து சாப்பிடலாம்.
Gur Mango Phirni:கோடை காலம் முடிவது ஒரு வகையில் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மாம்பழம், தர்பூசணி சாப்பிட முடியாதே என்ற ஏக்கத்தை தரும். இருப்பினும், இப்போது எல்லா காலங்களிலும் சில பழங்கள் கிடைக்க தொடங்கிவிட்டன. மாம்பழம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள் இந்த இனிப்பை செய்து சாப்பிடுங்க.
பழங்களின் அரசன் மாம்பழம் வைத்து பிர்னி என்ற இனிப்பு எப்படி செய்யலாம், என்று காணலாம். இது மத்திய கிழக்கு நாடுகளில் சாப்பிடப்படும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. வட இந்திய மாநிலங்களில் பல்வேறு பழுத்த மாம்பழம் இருந்தால் இதை எளிதாக செய்துவிடலாம்.
என்னென்ன தேவை?
அரிசி - 50 கிராம்
தண்ணீர் - 200 மி.லி.
மாம்பழம் - 280 கிராம்
பால் - 1லி
பிஸ்தா - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
வெல்லம் - 100 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 50 கிராம் அரிசியை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நன்றாக பழுத்த மாம்பழத்தை தோல் உரித்து மிஸ்சியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க கூடாது. பழுத்த மாம்பழங்களை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ளலாம். அடுத்து, அரிசியை கொரகொரப்பாக மிக்ஸியில் போடு அரைத்து எடுத்து தனியே வைக்க வேண்டும். வெல்லத்தை பொடியாக்கி வைக்கவும்.
இப்போது தேவையான பொருட்கள் தயாரானதும் அடிப்பில் அடி கனமான பாத்திரத்தை மிதனமான தீயில் வைத்து ஒரு லிட்டர் பாலை நன்றாக கொதிக்க வைக்கவும். பால் பொங்கியதும், அதில் உடைத்த அரிசியை போட்டு நண்றாக வேக விடவும். 20 நிமிடங்களுக்கு பிறகு அரிசி வெந்திருக்கும். இதொடு 100 கிராம் பொடியாக்கிய வெல்லத்தை சேர்க்கவும். 12-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு இந்த கலவை ஆற விடவும். இதோடு, மாம்பழ விழுது, நறுக்கிய மாம்பழ துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். ஏலக்காய் தூள், துருவிய பிஸ்தாவை இதோடு சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜ்ஜில் 2 மணி நேரம் வைக்க வேண்டும். சுவையான இனிப்பு தயார்.
இளநீர், மாம்பழம் ஷேக்
என்னென்ன தேவை?
இளநீர் - 2
மாம்பழம் - 2
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
இளநீரில் கிடைக்கும் தேங்காய், தண்ணீர் இரண்டையும் எடுத்துக்கொள்ளவும். இதோடு தோல் நீக்கிய நன்கு பழுத்த மாம்பழத்தை துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். இளநீர் தேங்காய், தண்ணீர், மாம்பழம் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்தால் திக்கான ஷேக் த்யார். இனிப்பு தேவையெனில் கன்டன்ஸ் மில்க், தேன் ஏதாவதை ஒன்றை சேர்க்கலாம். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குடித்தால் கோடைக்கு நன்றாக இருக்கும்.
இதே செய்முறையில் மாம்பழத்துடன் நுங்கு சேர்த்து மில்க்ஷேக் செய்து குடிக்கலாம். ருசியாகவும் இருக்கும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும்.
இளநீரில் அதிகளவு எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளது. வெயிலை சமாளிக்க அல்லது தாகம் எடுக்கும்போது, சோடா அல்லது செயற்கையான குளிர்பானங்களை சாப்பிடுவது நல்லதல்ல. அவற்றில் கலோரி அதிகம். அதோடு சர்க்கரை அளவு மிகவும் அதிகம். ஆனால், இளநீர் குறைந்த கலோரி கொண்டது. இதில் சராசரியாக, 8-அவுன்ஸ் (240-மில்லி லிட்டர்)-; சுமார் 45-60 கலோரி இருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்திக்கு உதவும்.
மாம்பழம் நார்ச்சத்து நிறைந்தது. கலோரியும் குறைவும். சத்துமிகுந்த மாம்பழம், இளநீர் கொண்டு ஜூஸ் செய்து குடிப்பது நல்லதுதான்.