மேலும் அறிய
Advertisement
Mangalore Fish Curry:சுவையான மங்களூர் மீன் குழம்பு செய்வது எப்படி? இப்படித்தான்!
சாதத்துடன் சாப்பிட சுவையான மங்களூர் மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மங்களூர்வாசிகள் தினமும் தங்கள் உணவில் மீனை சேர்த்துக் கொள்வர். அவர்கள் வைக்கும் மீன் குழம்பு காரசாரமாக வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது மங்களூர் ஸ்டைலில் சுவையான மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
500 கிராம் மீன் (2″ துண்டுகளாக வெட்டப்பட்டது), 1/2 கப் தேங்காய் பால், 35 கிராம் புளி, 1″ துண்டு இஞ்சி, 3 பூண்டு கிராம்பு, 8 காய்ந்த மிளகாய், 1 தேக்கரண்டி சீரகம், 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள், 10-15 கறிவேப்பிலை, 1/2 தேக்கரண்டி அஜ்வைன் (கேரம் விதைகள்), 1/2 தேக்கரண்டி வெந்தயம், 2 பச்சை மிளகாய், 1 மீடியம் சைஸ் வெங்காயம், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை
- புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மீடியம் சைஸ் வெங்காயத்தின் ஒரு பாதியை தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒன்றரை டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி, மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.பின் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், வெந்தயம், கேரம், ஆகியவற்றை சேர்க்கவும். இதனை சில வினாடிகள் வதக்கி கொள்ளவும்.
- நறுக்கிய வெங்காயம், பூண்டு கிராம்பு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் முழு சிவப்பு மிளகாயை சேர்க்க வேண்டும். இதனை வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
- வதக்கிய பொருட்களை ஆற விட வேண்டும். சிறிது கறிவேப்பிலையை அலங்கரிப்பதற்காக எடுத்துக் கொள்ளவும்.
- புளியை கரைத்து தொக்கு இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- வறுத்த மசாலாவை புளி கூழுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
- வெங்காயத்தின் மீதம் உள்ள பாதியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒன்றரை டீஸ்பூன் எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும். இதில் மஞ்சள் தூள், மற்றும் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மீன் துண்டுகளை இதில் சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி, 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- இப்போது குழம்பை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்க வேண்டும். இந்த குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அலாதி சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion