(Source: ECI/ABP News/ABP Majha)
Maha Shivratri 2024:மகா சிவராத்திரி வழிபாடு! தவிர்க்க வேண்டிய உணவுகள், செய்ய வேண்டியதும், கூடாததும் - ஓர் அலசல்
Maha Shivratri 2024: மகா சிவராத்திரியன்று பின்பற்ற வேண்டியவைகள் தவிர்க்க வேண்டியவைகள் குறித்து விரிவாக காணலாம்.
இந்தாண்டு புகழ்பெற்ற மகா சிவராத்திரி நாளை (08.03.2024) கொண்டாடப்பட உள்ளது.
மகா சிவராத்திரி:
மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்ஷத்தில் இந்த சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் இதே திதி பிரசித்தி பெற்றது. மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.
இந்துக்களின் புராணங்களின்படி மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றுகிறார். அது முதன்முதலில் ஒரு மகா சிவராத்திரி நாளில் தான் நிகழ்ந்தது. விஷ்ணுவும், பிரம்மனும் தான் அந்த சிவராத்திரி நாளில் லிங்க வடிவில் சிவனை முதன்முதலில் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. மாத சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளும் நபர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்று புராண கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
நான்கு கால பூஜைகள்:
மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. மன அமைதிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்தால் பல நன்மைகளும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சென்று பூஜைகளில் பங்கேற்க முடியாவதவர் வீடுகளிலேயே சிறப்பு பூஜைகள் செய்யலாம்.
சிவராத்திரி விரத முறை
சிவாராத்திரியன்று விரதம் இருக்க முடிவு செய்பவர்கள், விரத முறைகளை நெறியோடு பின்பற்ற வேண்டும். மகா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்துவிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிக்க வேண்டும். சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கு போட வேண்டும். பழங்கள், இனிப்புகளை சிவபெருமானுக்கு படையலாக இடலாம். சிவன் சாலிஸம் படிக்க வேண்டும்.
அன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். கோதுமை மாவு பயன்படுத்தி செய்த உணவுகள், கோதுமை ரவை உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு சேர்க்க கூடாது என்று சொல்லப்படுகிறது.
சிவராத்திரியன்று இரவில் ஓம் நமசிவாய என சிவன் நாமத்தை சொல்லி சிவனை பூஜிப்பபவர்கள் மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா நோயும் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஒரு சில சிவாலங்களில் சிவராத்தியன்று இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அதில் பங்கேற்று சிவனை தியானிக்கலாம். வீடுகளில் பூஜை செய்பவர்கள் வீடுகளிலேயே தேவாரம் திருவாச பாடல்களை படிக்கலாம்.
வீட்டை நன்கு சுத்தம் செய்து பூஜை, வழிபாடு நடத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
மகா சிவராத்திரி தினத்தன்று செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்:
- சிவராத்திரியன்று மாமிச உணவுகள் சாப்பிட கூடாது. அரிசி, மைதா உள்ளிட்டவற்றையும் தவிர்க்கலாம். எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள், பழங்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். பால், பழங்கள் சாப்பிடலாம்.
- எண்ணெயில் பொரித்த உணவுகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட கூடாது.
- எந்த உணவிலும் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். சாத்விக் உணவுமுறை, வாழ்வியலை அன்றைய தினம் கடைப்பிடிக்க வேண்டும்.
- மகா சிவராத்திரியன்று நகம் வெட்டுவது, முடி வெட்டுவது உள்ளிட்டவைகளை செய்ய கூடாது.
- விரதம் இருப்பதால் தியானம் செய்யலாம்.
- கர்ப்பமாக இருக்கும் பெண்கள், உடல்நலனுக்காக மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் விரதம் இருப்பவர்கள் வெங்காய், உப்பு சேர்க்காமல் சில காய்களை கொண்டு உணவு தயாரித்து சாப்பிடலாம்.
- விரதம் முடிந்ததும் பழங்கள், எளிதில் செரிமானம் ஆக கூடிய உணவுகளை சாப்பிடலாம்.
- பருப்பு, தானியங்கள் உள்ளிட்டவைகள் கூட தவிர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
- நிறைய தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- டீ, காஃபி உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம்.
- பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- உணவு உண்ணாமல் விரதம் இருப்பவர்கள் உலர் பழங்கள் சாப்பிடலாம்.
- ஒருவேளையாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் உப்புமா உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். உப்பு இல்லாமல் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
சாபுதனா கிச்சடி - Mahashivaratri Special: மகா சிவராத்திரி 2023: சாபுதனா கிச்சடி செய்வது எப்படி? நன்மை என்ன?
மேலும் வாசிக்க..Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி 2024! நான்கு கால பூஜைக்கான நேரமும், வழிபடும் முறைகளும் என்ன? - ஓர் பார்வை
மேலும் வாசிக்க..Lord Shiva Avatars : சிவ பெருமானின் அவதாரங்கள் பற்றி தெரியுமா? புராணங்கள் சொல்வதென்ன?