(Source: ECI/ABP News/ABP Majha)
Lord Shiva Avatars : சிவ பெருமானின் அவதாரங்கள் பற்றி தெரியுமா? புராணங்கள் சொல்வதென்ன?
Lord Shiva Avatars in Tamil: சிவபெருமானின் அவதாரங்கள் குறித்து இக்கட்டுரையில் கீழே விரிவாக காணலாம்.
இந்தியா என்பது பன்முக தன்மை கொண்டது. பலவிதமான கலாச்சாரங்கள் போன்றவற்றின் கலவையாகும். நாடு முழுவதும் ஒவ்வொருவரின் ஆட்சி காலகட்டத்தில் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் மட்டுமே இருப்பதாக கருதுவோம் இல்லையா? ஆனால், சிவன் கோயில்களில் சிவனின் அவதாரங்களும் இருக்கும். அவற்றை பற்றி இக்கட்டுரையில் காணலாம். சிவ புராணங்களில் ஈசனின் திருவிளையாடலும், அவதாரங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்த்தநாரீஸ்வரர்
இந்த உலகை இயக்கும் சக்தியின் பெருமையை உணர்த்ததும் விதமாக ஈசன் தன் உடலில் பாதியை உமையாளுக்கு தந்தார். அதுவே அர்த்தநாரீஸ்வர வடிவம்.
சிவனின் அவதாரங்களில் இதற்கு தனிச் சிறப்பு உண்டு. வாழ்வியலிலும் ஆணும் பெணும் சமம் என்றும், இருவரும் சார்ப்புண்ணி என்ற உண்மையை உணர்த்துவதாக உள்ளது.
திரிபுராந்தகர்
திரிபுராந்தகர் அசுரர்களை அழித்த அவதாரமாக சொல்லப்படுகிறது. தன்னுடைய மாதவத்தால் நான்முகனிடமிருந்து பொன் கோட்டை பெற்ற தாரகாட்சன், வெள்ளிக் கோட்டை பெற்ற கமலாட்சன், இரும்பு கோட்டை பெற்ற வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும், ஆணவத்தையும் அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் போற்றப்படுகிறார்.
பிட்சாடனர்
புராணகதைகளின் படி, ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றுவிட்டார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாத காரணத்தினாலேயே தந்தை வீட்டைவிட்டு சென்றதாக உணர்கிறார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார் என்றும் தாருகா வன முனிவர்களுக்கு இருந்த ஆணவத்தை ஒடுக்கவும் ஈசன் மேற்கொண்டது பிட்சாடனர் திருக்கோலம் என்று சொல்லப்படுகிறக்து.
நந்தி அவதாரம்
முனிவர் சிலாடாவர் மேற்கொண்ட கடும் தவத்தினால் உருவானதுதான் சிவனின் நந்தி அவதாரம். சிலாடவர் சிவபெருமானின் அருள் வேண்டினார். அதோடு, சாகா வரத்துடன் குழந்தையொன்றையும் கேட்டார். முனிவரின் பக்தியில் மனம் நெகிழ்ந்த சிவபெருமான் அவருடைய மகனாக பிறக்க நந்தி அவதாரம் எடுத்தார். பின்னர், நந்தி கைலாசத்தில் சிவனுக்கு பாதுகாவலனாக மாறிவிட்டார். நினைப்பதை நடத்தி கொடுப்பவராகவும் நந்தி வழிபாடு இருக்கிறது.
பைரவர்
புராணங்களின் படி, பிரம்மாவின் ஆணவத்தை அழிப்பதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். சிவனின் அவதாரங்களில் இது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. பேராசை, பொறாமை உள்ளிட்ட தீய எண்ணங்களில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். இவர் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். அச்சம் நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர். எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, உள்ளிட்ட துர்மரணங்களில் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவர் என்று நம்பப்படுகிறது.
ரிஷபாரூடர்
64 நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். பார்வதியுடனும் விநாயகர்,முருகப்பெருமானுடனும் ஈசன் புன்முறுவல் பூத்த வண்ணம் எருது வாகனத்தி அருளும் திருவடிவம், ரிஷபாரூடர் எனப்படுகிறது.
ரிஷப அவதாரம்
பார்க்கடல் கடைந்த பிறகு, கீழோகத்திற்கு சென்றார் திருமால். அங்கே ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு அவருடன் வாழ தொடங்கினார். திருமணம் நடந்தது. திருமாலுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரன் குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர. அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து அவர்களை அழித்து உலகை காப்பாற்றினார் ஈசன்.
வீரபத்திரர்
சிவனுடைய மாமனாரான தட்சப்பிரஜாபதி யார் பேச்சை கேட்காமல், சிவனையும் மதிக்காமல் யாகம் செய்த அவரை அழித்த ஈசன் வீரபத்திரர் எனும் தட்ச சம்ஹாரமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
திருக்கல்யான திருக்கோலம்
பார்வதி தேவி மணந்தால் சிவனை மட்டுமே என்று தவமிருந்தார். அதன்பிறகு, சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றது. இதில் தேவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இது திருக்கல்யாண கோலம் என்று கூறப்பட்டுகிறது. பார்வதியை மணக்க அவதரித்த ஈசன் கொண்டாடப்படுகிறான்.
யாதிநாத் அவதாரம்
காட்டில் ஒரு கணவன் - மனைவி வாழ்ந்து வந்தனர். அவர்களை ஒரு முறை யாகித் வடிவில் சிவபெருமான் சந்தித்தார். அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்வதாக கூறினார். அவர்கள் இருந்ததோ சின்ன குடிசை. இருப்பிட வசதி காரணமாக அவர்கள் இருக்கக்கூடிய சின்ன குடிசையில் விருந்தாளிகளை தங்க வைக்க, நினைத்தார் கணவர். அதனால், இரண்டு பேரும் வெளியபடுக்க முடிவெடுத்தனர். ஆனால் அன்று இரவு வன விலங்குகளால் கணவர் கொல்லப்பட்டார். இதையறிந்த அவரது மனைவி சாக நினைத்தார். உடனே, சிவன் தன் உருவத்தை வெளிக்காட்டினார். சிவபெருமான் மனைவிக்கு வரமளித்தார். அதன்படி, கணவர் மீண்டும் பிறந்தார். இருவரும் மண்ணில் வாழும் வரம் பெற்றனர். இது யாதிநாத் அவதாரமாக போற்றப்பட்டுகிறது.
கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
மனிதர்கள் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
பிஷ்க்வர்யா அவதாரம்
குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிச்சைக்காரான் அவதாரம் எடுத்தார் சிவன். குழந்தையை மீட்டு பெற்றோரிடம் சேர்த்த கதை இது.
சுரேஷ்வர் அவதாரம்
உபமன்யன் என்ற பக்தனை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம். இதில் உபம்ன்யன் தனது பக்தியால் வெற்றிபெற்று சிவபெருமானை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சுண்டன் தர்கா அவதாரம்
திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை இமாலயா விடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.
பிரமச்சாரி அவதாரம்
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
எக்ஷெக்வர் அவதாரம்
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.
மகா சிவராத்திரி:
பிப்ரவரி 18ஆம் தேதி மகா சிவராத்திரி விரதத்தை தொடங்குபவர்கள் மறுநாள் பிப்ரவரி 19ஆம் தேதி முடிக்க வேண்டும். அல்லது, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 6.59 மணிக்கு தொடங்கி மதியம் 3.24 மணிக்குள் எந்த நேரத்திலும் விரதத்தை முடிக்கலாம். விரத நாளில் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். மேலும், கண் விழித்து மந்திரங்கள் சொல்ல வேண்டும். அதன்படி,
மந்திரங்கள்
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் நம் மனதிலிருந்து பயம் நீங்கும். நமக்குள் ஒரு நேர்மறைவான அதிர்வை உருவாக்குகிறது.
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய