Mahashivaratri Special: மகா சிவராத்திரி 2023: சாபுதனா கிச்சடி செய்வது எப்படி? நன்மை என்ன?
இந்திய கலாச்சாரத்தில் அதுவும் இந்துக்கள் கலாச்சாரத்தில் விரத நாட்களில் சாபுதனா கிச்சடி செய்யப்படுவது வழக்கம்.
இந்திய கலாச்சாரத்தில் அதுவும் இந்துக்கள் கலாச்சாரத்தில் விரத நாட்களில் சாபுதனா கிச்சடி செய்யப்படுவது வழக்கம். இந்த பாரம்பரியமான கிச்சடி ஆரோக்கியமானது மட்டுமல்ல இதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமிருப்பதால் இது நல்ல சக்தியைத் தருகிறது. இது எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் மலச்சிக்கலைத் தீர்ப்பதாகவும் உள்ளது. சாபுதனா கிச்சடியை காய்கறிகள், வேர்க்கடலையுடன் செய்யும் போது அது இன்னும் இன்னும் ஆரோக்கியமான உணவாக மாறிவிடுகிறது.
மகா சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து சபூதனா கிச்சடியை பிரசாதமாக தயாரிப்பர். ஆகையால் இந்த சாபுதனா கிச்சடியை எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் சபுதனா என்றால் என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கு.. சபுதனா என்பது ஜவ்வரிசியே தவிர வேறொன்றும் இல்லை.
தேவையான பொருட்கள்:
ஐவ்வரிசி - 1கப்
தண்ணீர் - 1கப் + அலசுவதற்கு
ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்.
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 6-10
வேக வைத்த உருளைக்கிழங்கு (தோலுரித்து சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்) -
வறுத்த நிலக்கடலை(கரகரப்பான அரைவை பதத்தில் )
3/4 கப் பொடியாக்கப்பட்ட சர்க்கரை
3 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் - 1
உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லி இலைகள்(நறுக்கியது)
அலங்கரிக்க வறுத்த நிலக்கடலை
செய்முறை:
ஐவ்வரிசியை எடுத்து ஒரு சல்லடையில் வைத்து நன்றாக தண்ணீர் விட்டு அதன் ஸ்டார்ச் போகும் வரை அலச வேண்டும் அதை பிறகு ஒரு பெளலுக்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். கிட்டதட்ட 6-8 மணிநேரம் ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து விடவும். கொஞ்சம் ஐவ்வரிசியை எடுத்து நசுக்கி பார்த்தால் அது நசுங்க வேண்டும். இதுவே நன்றாக ஊறினதுக்கான அடையாளம். பிறகு பவுடராக்கப்பட்ட சர்க்கரையை வறுத்த நிலக்கடலையுடன் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் லெமன் ஜூஸை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். சீரகம் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு ஊற வைத்த ஐவ்வரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு மூடியை கொண்டு பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் சமைக்க வேண்டும். நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் வறுத்த நிலக்கடலையை கொண்டு அலங்கரிக்கவும். நாவை ஊற வைக்கும் சுடச்சுட சபுதனா கிச்சடி அல்லது ஐவ்வரிசி கிச்சடி ரெடி. சிவராத்திரி மட்டுமல்ல வேறு எந்த விரதமாக இருந்தாலும் இந்த சபுதனா கிச்சடியை உண்பது நலம் பயக்கும்.