Kashmiri Dum Aloo: நாண், சப்பாத்திக்கு ஒரு சூப்பர் சைடிஷ்.. கஷ்மீரி தம் ஆலூ செய்முறை பார்க்கலாம்!
சப்பாத்தி மாற்றும் நாண்-க்கு ஒரு சூப்பர் சைடிஷான கஷ்மீரி தம் ஆலூ எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு வழக்கமாக சாப்பிடும் குருமா, சென்னா, பன்னீர்பட்டர் மசாலா போன்ற சைடிஷ்கள் போரடித்து விட்டதா?அப்போ புதுசா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. கஷ்மீரி தம் ஆலூ எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பேபி உருளைக்கிழங்கு - 1 கிலோ, சோம்பு - ஒரு ஸ்பூன், கிராம்பு - 4, சீரகம் - ஒன்றரை ஸ்பூன், மிளகு - அரை ஸ்பூன்,ஏலக்காய் - 4, லவங்கப்பட்டை -1, மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன், ஜாவித்திரி - 1, தயிர் - 400 கிராம், சிவப்பு மிளகாய் -20, கஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்,இஞ்சி தூள் - அரை ஸ்பூன், எண்ணெய் -தேவையான அளவு, கசூரி மேத்தி- அரை ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முதலில் ஒரு பிரஷர் குக்கரில், பேபி உருளைக்கிழங்கை தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை ஆறவிட்டு, தோலை உரித்து பற்குச்சியால் குத்தி வைக்கவேண்டும்.இந்த உருளைக்கிழங்கில் தேவையான அளவு உப்பு மற்றும் கஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானது பின் இந்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மசாலா தூள் அரைக்க ஒரு கடாயில் சீரகம், சோம்பு, மல்லிவிதை, மிளகு, ஏலக்காய், பட்டை, ஜாவித்திரி, கிராம்பு சேர்த்து நன்றாக வறுத்து சிறிது நேரம் ஆறவைத்து, மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
20 காய்ந்த சிவப்பு மிளகாயை, விதைகளை நீக்கிவிட்டு வெண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் தயிர், அரைத்த மசாலா தூள், இஞ்சி தூள், அரைத்த காய்ந்த மிளகாய் விழுது சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், அதில், பெருங்காயத்தூள்,கஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலா கலந்த தயிர் கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளரி, கடாயை மூடி பத்து நிமிடத்திற்கு கொதிக்கவிட வேண்டும். கடைசியாக இதன் மீது கசூர் மேத்தி தூவி இறக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான கஷ்மீரி தம் ஆலூ ரெடி.
மேலும் படிக்க
சாதத்திற்கு சூப்பர் சைடிஷ்... செட்டிநாடு பூண்டு புளிக்குழம்பு ரெசிபி செய்முறை இதோ!
Mushroom Biriyani : பளபளன்னு மின்னும் காளான் பிரியாணி.. சூப்பர் ரெசிப்பி இங்க இருக்கு..