Cloud Eggs Recipe: இன்டர்நெட்டை கலக்கும் “கிளவுட் முட்டை ரெசிபி” : இதோ 5 நிமிஷத்துல செய்யலாம்..
இண்டெர்நெட்டை கலக்கும் “கிளவுட் முட்டை ரெசிப்பி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
கிளவுட் முட்டை ரெசிபி மிகவும் சுவையானது. இது பார்ப்பதற்கு வெள்ளை பஞ்சு போன்ற தட்டையான மேகங்கள் மீது அட்ராக்டிவான மஞ்சள் நிறத்திலான கரு வைக்கப்பட்டதை போன்று இருக்கும். சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும். இந்த ரெசிபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிளவுட் முட்டை ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 முட்டைகள், 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய கேரட் (விரும்பினால்), 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய மிளகுத்தூள் (விரும்பினால்), 1/4 கப் அரைத்த சீஸ், சுவைக்கு உப்பு, ருசிக்க கருப்பு மிளகு தூள், சுவைக்க மூலிகைகள்.
செய்முறை
முட்டையின் வெள்ளைக்கருவை முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து பிரிக்க வேண்டும். அப்படி பிரிக்கும் போது, முட்டையின் மஞ்சள் கருக்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு சிறு கரண்டி அல்லது பீட்டர் வைத்து நன்றாக நுறை வரும் வரை பீட் (கலக்கிக்கொள்ள ) செய்ய வேண்டும்.
அரைத்த சீஸ், மசாலா மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். இதன் பின் இந்த வெள்ளைக் கருவை ட்ரேயில் spread செய்யும் போது அதன் நடுவின் ஒரு குழி போன்ற வடிவம் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பேக்கிங் ட்ரேயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் parchment paper -ஐ வரிசையாக வைக்க வேண்டும். அதன் மீது ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளைக்கருவை ஸ்பூனால் எடுத்து வைக்க வேண்டும் (மேகம் போன்ற வடிவங்களை உருவாக்கவும்)
உங்கள் மைக்ரோவேவ் அவனை 200 டிகிரி செல்சியஸுக்கு (தோராயமாக 400 டிகிரி பாரன்ஹீட்) முன்கூட்டியே சூடாக்கி, முட்டையின் வெள்ளைக்கருவை சுமார் 5-6 நிமிடங்கள் அல்லது அவை வெந்து சிறிது பொன்னிறமாகும் வேக வைக்க வேண்டும்.
வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவின் மேல், முட்டையின் மஞ்சள் கருவை கவனமாக வைக்க வேண்டும். அவை உடையாமல் இருப்பதை உறுதி செய்யவும். மஞ்சள் கருவின் செழுமையான, கிரீமி நிலைத்தன்மையை பராமரிக்க, ட்ரேவை இரண்டு நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்க வேண்டும். பின்னர் வெளியில் எடுத்தால் கிளவுட் முட்டை ரெசிபி ரெடி...!
இந்த ரெசிபியை உங்களுக்கு பிடித்த உணவுடன் வைத்து சாப்பிடலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம்.
மேலும் படிக்க,
தமிழ்நாட்டில் இப்படியா? வெப்ப அழுத்த எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..