Hing Substitutes:பெருங்காயம் பிடிக்கலையா? இந்த பொருட்களையெல்லாம் அதுக்கு பதிலா யூஸ் பண்ணலாம்
பெருங்காயம் இல்லாத நேரத்தில் அதற்கு மாற்றாக சில மசாலா பொருட்களை பயன்படுத்தலாம்.
இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலாவாக உள்ளது. ஃபெருலா தாவரத்தின் வேரில் இருந்து பெருங்காயம் கிடைக்கின்றது. பெருங்காயம் அதன் நறுமணத்திற்கு புகழ்பெற்றது. இது உணவுகளின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் செரிமான பண்புகளை கொண்டிருக்கிறது. பெருங்காயம் வீக்கம் மற்றும் வாயுவை தடுக்கும் என கூறப்படுகிறது. ரசம் உள்ளிட்ட ஒரு சில உணவுகளை நாம் தயாரிக்கும்போது அவை பெருங்காயம் இல்லாமல் முழுமை பெறுவதே இல்லை.
சமைத்துக்கொண்டிருக்கும் போது திடீரென அத்தியாவசிய பொருள் ஏற்கனவே தீர்ந்து விட்டது தெரிய வந்தால், அந்த சமையலை நன்றாக சமைத்த திருப்தியே வராது. இது போன்ற சூழ்நிலையில் மாற்றுப் பொருட்கள் உங்களுக்கு கை கொடுக்கலாம். பெருங்காயத்திற்கு மாற்றாக நாம் என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாங்க.
1.பூண்டு தூள்
பூண்டு, பெருங்காயத்தின் தனித்துவமான சுவையை பிரதிபலிக்கிறது. அதன் வலுவான மற்றும் கடுமையான நறுமணம் பெருங்காயத்தின் வாசனையை ஒத்திருக்கிறது. பூண்டுக்கு பதில் பூண்டு பொடியைத் தேர்ந்தெடுப்பது சுவையை மேலும் அதிகப்படுத்த உதவும். பூண்டு தூள் கையில் இல்லை என்றால், பூண்டு கிராம்புகளை எண்ணெயில் வதக்கி, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
2. வெங்காய தூள்
பூண்டை விரும்பாதவர்களுக்கு வெங்காயத்தூளை பயன்படுத்தலாம். பூண்டை போலவே, வெங்காயமும் ஒரு நல்ல நறுமணத்தை கொண்டது. இது பெருங்காயத்தின் சுவையை பிரதிபலிக்க உதவுகிறது. வெங்காயத்தில் நீர்ச்சத்து இருப்பதுடன், இது லேசான இனிப்பு மற்றும் கார சுவையை கொண்டது. வெங்காய பொடிக்கு பதிலாக, வீட்டிலேயே வெங்காயத்தை பேஸ்ட்டாக தயார் செய்து அதை பெருங்காயத்துக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
3. சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தையும் பெருங்காயத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம். சின்னவெங்காயம் பொதுவாகவே சுவைக்காக பயன்படுத்தக்கூடியது. சின்ன வெங்காயத்தை எந்த உணவில் பயன்படுத்தினாலும் நமக்கு கூடுதல் சுவை கிடைக்கும். எனவே பெருங்காயம் இல்லாத நேரத்தில் அதற்கு மாற்றாக சின்ன வெங்காயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. கொத்தமல்லி மற்றும் சீரகப் பொடி
கொத்தமல்லி மற்றும் சீரகப் பொடியைக் கலந்து பெருங்காயத்துக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இந்த இரண்டு மசாலா பொருட்களும் பெருங்காயத்தின் சுவையை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அசல் பெருங்காயத்தை போன்ற சுவையை கொடுக்காவிட்டாலும். நல்ல மணத்தையும் சுவையையும் கொடுக்கும். மேலும் சோம்பு பொடியையும் பெருங்காயத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம். லேசான இனிப்பு சுவை நிறைந்த சோம்பின் வித்தியாசமான சுவை உங்கள் சமையலின் சுவையையும் , மணத்தையும் கொடுக்கும்.
மேலும் படிக்க,