மேலும் அறிய
Advertisement
Fruit Mixture Juice: ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் பிடிக்குமா? இனி வீட்டிலேயே ஈசியா ரெடி பன்னுங்க...
ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் குடிக்க இனி கடைக்கு போக வேண்டாம். வீட்டிலேயே தயார் பண்ணுங்க.
ஃப்ரெஷ் ஜூஸ் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். பழ சாறு ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்தது என்பதால் எல்லோருமே அதை விரும்பி அருந்துவோம். கடைகளில் கிடைக்கும் ஃப்ரெஷ் ஜூஸ்களை சிலர் விரும்புவதில்லை. காரணம் அவர்கள் பயன்படுத்தும் பழம் மற்றும் தண்ணீர் தரம் வாய்ந்தது தானா என்ற சந்தேகம் தான் காரணம். அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து பருக விரும்புவர். உங்களுக்காகவே ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்று பார்க்க போறோம்.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் சாக்லேட் சிரப், 2ஸ்பூன் சப்ஜா விதைகள், 100 கிராம் நறுக்கிய பேரிச்சம்பழம், ஒரு ஆப்பிள், 100 கிராம் பச்சை திராட்சை, 100 கிராம் கருப்பு திராட்சை, 25 கிராம் பாதாம் நறுக்கியது, சர்க்கரை தேவையான அளவு, அரை லிட்டர்பால், 2 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர், ஒரு மாதுளையின் உரித்த முத்துக்கள்.
செய்முறை
முதலில் அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பாலில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரைத்து விட வேண்டும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிப்படாமல் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை கலந்த பாலை லேசான தீயில் வைத்து , நாம் கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கொதித்ததும் இறக்கி கொள்ள வேண்டும். சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் ஊற்றி நன்கு நுரைக்க அடித்து எடுத்து, அதை பிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நாம் வைத்துதுள்ள பழங்களை எல்லாம் துண்டுகளாக்கி சேர்த்து நான்றாக ஸ்மாஷ் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பழமாக சேர்த்து ஸ்மாஷ் செய்ய வேண்டும் அப்போது தான் ஸ்மாஷ் செய்ய ஈசியாக இருக்கும். சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பேரிச்சம் பழத்தையும் இதனுடன் சேர்த்து ஸ்மாஷ் செய்து கொள்ள வேண்டும்.
பின் ஊறவைத்த சப்ஜா விதையை ஸ்மாஷ் செய்து வைத்துள்ள பழ கலவையில் உற்றவும்.
பிறகு மிக்சி ஜாரில் ஓட்டி வைத்திருக்கும் பாலை ஸ்மாஷ் செய்து வைத்துள்ள பழ கலவையின் மேல் ஊற்ற வேண்டும். கடைசியாக அதை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி சாக்லேட் சிரப்பை கொண்டு டிசைன் செய்து கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான ப்ரூட் மிக்ஸ்சர் ஜூஸ் தயார்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion