காலை உணவு சமைக்க லேட் ஆகுதா..? வாழைப்பழங்கள் இருந்தா போதும்.. இத்தனை டிஷ்கள் ரெடி..
ஈக்கள் மொய்க்கும் மீந்து கிடக்கும் உங்கள் சமையலறை வாழைப்பழங்களில் இருந்து குழந்தைகளுக்குப் பிடித்தமான பதார்த்தங்களை செய்யலாம்.
எல்லா வீடுகளிலும் சமையலறையில் ஒரு கூடையில் வாழைப்பழங்கள் காத்துக் கிடக்கும். மிகக் குறைவான விலையில் அற்புதமான சத்துக்களுடன் கிடைக்கும் பழம் வாழைப்பழம்தான். ஆனால், அதனாலேயே சில சமயம் வீணாகப்போவதும் உண்டு. ஆனால், வாழைப்பழங்களை அப்படியே உண்ணாமல் சுவையான சிற்றுண்டிகளையும் செய்து சாப்பிடலாம். அப்படியான சில உணவுகள் இங்கே.
- வாழைப்பழ கேக்
சிறிது கொட்டைகள், பருப்புகள் கலந்து, வாழைப்பழங்களை மசித்து சேர்த்து இந்த கேக்கைத் தயாரிக்கும்போது ஒரு அற்புதமான வாசம் உங்கள் சமையலறையை நிறைக்கும், மிக சுவையான கேக் இது.
- வாழைப்பழ போண்டா
காரமான போண்டாக்கள் சாயுங்கால நேரத்தில் நமது வழக்கமான உணவு, ஆனால் சிறிது இனிப்பும் வாழைப்பழத்தின் துளி துவர்ப்பும் சேரும் இந்த போண்டா தேநீர் நேரத்தில் உண்ணுவதற்கு சரியான பதார்த்தம்.
- இலவங்க வாழைப்பழ கேக்
பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வாழைப்பழங்களை அரைத்து மாவுடன் கலந்து செய்யப்படும் இந்த கேக் வயிறு நிறைய மாபெரும் விருந்துண்ட பின்னர் வயிற்றை இலகுவாக்க ஏற்ற உணவு.
- பழம்பொரி
பழம்பொரி யாருக்குத்தான் பிடிக்காது? மாலை நேரங்களில், சீரகத்துடன் சேர்த்திருக்கும் பழம்பொரி, கட்டஞ்சாயா அருந்தும் நேரம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும்.
- வாழைப்பழ புட்டிங்
பாலும், வாழைப்பழமும், சிறிது இனிப்பும், கெட்டியான பக்குவமும் ஆன புட்டிங் அனைவரையும் வீழ்த்திவிடும் சிற்றுண்டி.
- வாழைப்பழ சீஸ் சான்ட்விச்
வாழைப்பழமும் சீஸும் யாருக்கும் தெரியாத சரியான ஜோடி, சிறிது பிரட் உடன் சாப்பிடும்போது காலி வயிறும் நிரம்பி விடும்.
- வாழைப்பழ பேகன்
அவனில் வாழைப்பழத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கி, காயவிடும்போது நறுக்கென்ற மிக சுவையான இந்த உணவு கிடைக்கும்.
மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்