Pine Apple Diet : உடல் எடை குறைக்க அன்னாசி பழ டயட்டா? இதை கேள்விப்பட்டிருக்கீங்களா? முழுசா படிங்க..
ஸ்டென் ஹெகெலர் என்ற டேனிஷ் உளவியலாளரால் உருவாக்கப்பட்டது.
![Pine Apple Diet : உடல் எடை குறைக்க அன்னாசி பழ டயட்டா? இதை கேள்விப்பட்டிருக்கீங்களா? முழுசா படிங்க.. Ever heard about pineapple diet? Know how it's effective for weight loss Pine Apple Diet : உடல் எடை குறைக்க அன்னாசி பழ டயட்டா? இதை கேள்விப்பட்டிருக்கீங்களா? முழுசா படிங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/c6daad4df99a580c7ccf4f1b41e872ec167065387471475_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உடல் எடையைக் குறைக்க உலகம் முழுவதும் பல வழிமுறைகள் அறிவுறுத்தப்படுகின்றன. உடல் எடை குறைப்பு என்பது உடல்நலம் சார்ந்த அட்வைஸ்களில் மிக முக்கியமானது. உடலின் எடையைத் திட்டமாகக் குறைக்க பல சுகாதார நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சில விரைவான எடை இழப்பு திட்டங்களை வகுத்துள்ளனர்.
அன்னாசிப்பழ உணவுத் திட்டம் அத்தகைய பழம் சார்ந்த எடைக்குறைப்பு உணவுத் திட்டமாகும், இது ஐந்து நாட்களில் சில பவுண்டுகள் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. "”Sexy Pineapple food" என்றும் அழைக்கப்படும் அன்னாசிப்பழ உணவுமுறை, ஸ்டென் ஹெகெலர் என்ற டேனிஷ் உளவியலாளரால் உருவாக்கப்பட்டது.
View this post on Instagram
அன்னாசி உணவுமுறை என்பது கடுமையான உணவுத் திட்டமாகும், அதில் அந்த நபர் அன்னாசிப்பழத்தைப் பிரதான உணவாகச் சார்ந்து இருக்கிறார். கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உடல் இழக்கச் செய்வதன் மூலம், உடல் ஏற்கெனவே திரட்டப்பட்ட கொழுப்பு இருப்புகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும்.
அன்னாசி உணவு திட்டத்தை எவ்வாறு பின்பற்றுவது?
அன்னாசிப் பழ டயட்டைப் பின்பற்றும்போது, வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு நாம் அன்னாசிப்பழத்தைத் தவிர வேறு எதையும் சாப்பிட வேண்டியதில்லை. இரண்டு நாட்கள் என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டுமா என்பது தெளிவாக இல்லை. மற்ற ஐந்து நாட்களில், நாம் சாதாரணமாக சாப்பிட வேண்டும்.
அன்னாசிப்பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் என்சைம்கள் உட்செலுத்தப்பட்டுள்ளன, அவை ஒன்றாக இணைந்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவும், இதமாகவும் இருக்கிறது, எனவே கோடையில் இந்த உணவு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, நீங்கள் சில எடை இழப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள் என்றால், இந்த நன்மை பயக்கும் பழத்தை மிதமான அளவில் சாப்பிடுவது உண்மையில் உடலின் கூடுதல் கிலோவை விரைவாகக் குறைக்க உதவும்.
மருத்துவரில் அறிவுரை இன்றி, எந்த விதமான டயட்டையும் பின்பற்றக்கூடாது. ஒவ்வொரு உடலும் தனித்துவமானது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)