Chana masala: இட்லி, தோசை, சப்பாத்திக்கு செம்ம காம்போ - சென்னா மசாலா செய்வது எப்படி?
இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பர் சைடிஷ். சென்னா மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
கொண்டைக் கடலை – 200 கிராம், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, இஞ்சி -பூண்டு விழுது, வெங்காயம் – 2 , மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், மல்லித்தூள் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – தேவையான அளவு, தக்காளி – 2 , (நன்கு பழுத்தது) பட்டை – 1, ஏலக்காய் -2 , கிராம்பு – சிறிதளவு, பச்சைமிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை
சென்னா மசாலா செய்ய கொண்டைக்கடலையை 8 மணி நேரத்திற்கு முன்னரே தண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும். பின் ஊறிய கொண்டைக் கடலையினை ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரை விட்டு இறக்கி விட வேண்டும்.
பழுத்த இரண்டு தக்காளிகளை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய தேங்காய் அரை மூடி நறுக்கியது, இரண்டு பச்சை மிளகாய், 5 முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த சென்னாவை ஒரு கைப்பிடி அளவு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன் பச்சை வாசனை போனதும், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, சீரகத்தூள், ஏலக்காய், கிராம்பு,பட்டை ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் அதனுடன் சேர்த்து வதக்கி, சென்னா வேக வைத்த தண்ணீரை அதனுடன் சேர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள சென்னா மசாலாவை அதில் சேர்த்து, சென்னாவையும் சேர்க்க வேண்டும். இப்போது இதில் உப்பு சரியான அளவில் உள்ளதா என்பதை பார்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். அவ்வளவு தான் இப்போது கொத்தமல்லித்தழையை தூவி இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சென்னா மசாலா தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட்டால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
மேலும் படிக்க
Udhayanithi Stalin: சென்னையில் 2,364 புதிய குடியிருப்புகள்.. அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி