Carrot Paneer Uttapam: தோசை பிரியர்களே! கேரட்- பனீர் ஊத்தாப்பம் ரெசிபி இதோ!
Carrot Paneer Uttapam Recipe: கேரட் பனீர் ஊத்தாப்பம் செய்வது எப்படி என்று காணலாம்.

மாலை நேரத்தில் அல்லது இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசனையா? கேரட் பனீர் ஊத்தாப்பம் எப்படி செய்வது என காணலாம். பனீர், கேரட் என ஆரோக்கியத்துடன் ருசியான ஊத்தப்பத்தை காலை உணவாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - ஒரு கப்
ரவா - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
பனீர் துருவியது - ஒரு கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
தக்காளி பொடியாக நறுக்கியது - ஒரு கப்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராவா, தயிர், உப்பு, துருவிய கேரட் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். ஒரு 20 நிமிடங்கள் ஊறட்டும். இதில் மாதுளை போன்ற பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம். தோசை ஃபில்லிங்கிற்கு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய பனீர் அனைத்தையும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.
பின்னர், தோசை கல்லில் மாவை ஊத்தி தோசை வார்க்க வேண்டும். அதன்மீது பழ கலவை, துருவிய பனீர் அகிவயவற்றை சேர்த்து நன்கு வேக விடவும். அவ்ளோதான். சுவையான கேரட் பனீர் ஊத்தாப்பம் ரெடி,. இதற்கு வேர்க்கடலை, தேங்காய், தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
தோசை மாவு இருந்தால் இது செய்வது இன்னும் சுலபமாகிவிடும். கேரட், பனீர் இரண்டையும் நன்றாக துருவி வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிள்காய் உள்ளிட்டவற்றை நன்றாக வதக்கி அதில் கேரட், பனீர் சேர்த்து மசாலா தயாரித்து கொள்ளலாம். தோசை கல்லில் ஊத்தாப்பம் ஊற்றி மசாலா சேர்த்து பனீர், கேரட் ஊத்தாப்பம் தயாரிக்கலாம்.
எடை குறைப்புக்கு பனீர் நல்லதா என்று கேட்டால் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு பனீர் சிறந்த தேர்வு. இதில் புரோட்டீன் நிறைந்துள்ளது. பொதுவாகவே புரத உணவுகளுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் குணம் உண்டு என்று சொல்லப்படுகிறது. நீண்ட நேரம் திருப்தியாக சாப்பிட்ட உணர்வை தருவதால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படாது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. உணவு சமைக்கும்போது அதை ஆரோக்கியமாக தயாரிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தவும்.
ஹெல்தி சில்லி பனீர்:
முதலில் பனீர் துண்டுகளை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும். பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் துண்டுகளை சிறிது நெய்யில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து அதனுடன் வதக்கவும். இதனுடன் அரை தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். நன்கு கலந்து வெங்காயம் மற்றும் குடைமிளகாய் மென்மையாகும் வரை வதக்கவும். பரிமாறும் முன் பனீர் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்படுபவர்கள் இதில் சாட் மசாலா சேர்க்கலாம்.எளிதாக செய்துவிடலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

