14 நாட்கள் ஜெயில்! ARREST ஆன ஷிம்ஜிதா! போராட்டத்தில் குதித்த ஆண்கள்
கேரளாவில் தீபக் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கேரள மாநில கோழிக்கோட்டை சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர் பேருந்தில் பயணம் செய்யும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ் சென்ற நிலையில் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார் ஷிம்ஜிதா. அவரின் நோக்கம் தவறாக இருந்ததை புரிந்து கொண்டு தான் நான் வீடியோ எடுத்தேன், அவர் பேருந்தில் மற்றொரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என பேசியிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதால் மன உளைச்சலில் இருந்த தீபக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உள்நோக்கத்துடன் இப்படி செய்யவில்லை என்றும் லைக்ஸ் மோகத்தால் அந்தப் பெண் வீடியோ எடுத்ததாகவும் எதிர்ப்பு கிளம்பியது. தீபக் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிம்ஜிதா மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். காவல்துறை சார்பில் ஷிம்ஜிதாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸும் வெளியானது. இந்தநிலையில் தனது உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடனடியாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மஞ்சேரிப் சிறையில் அடைக்கப்பட்டார் ஷிம்ஜிதா.
கேரளாவில் அவருக்கு எதிராக கடும் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது. ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை, ஆண்களுக்கும் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது. போலீசார் ஷிம்ஜிதாவை கைது செய்து அழைத்து செல்லும் போது ஆண்கள் ஒன்றுகூடி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறை வாசலில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.





















