Skoda Kodiaq RS: சம்பவக்காரன் கம்மிங்.! ஸ்கோடாவின் முதல் மாடல் - சக்திவாய்ந்த இன்ஜின், கோடியாக் விலை, அம்சங்கள்
Skoda Kodiaq RS SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் செயல்திறன் சார்ந்த எஸ்யுவி கார் மாடலாக, கோடியாக் RS வரும் ஜுன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Skoda Kodiaq RS SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் கோடியாக் RS கார் மாடல் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக கொண்டுவரப்பட உள்ளது.
இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் RS எஸ்யுவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் கோடியாக் RS எஸ்யுவி கார் மாடல் வரும் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது உறுதியாகியுள்ளது. உள்நாட்டு சந்தையில் செக் குடியரசைச் சேர்ந்த ப்ராண்டின் முதல் செயல்திறன் சார்ந்த எஸ்யுவி என்ற பெருமையை இந்த கார் பெறுகிறது. நிலையான மாடலுடன் ஒப்பிடுகையில், RS வெர்ஷனானது ஸ்போர்ட்டியராகவும், மிகவும் சக்திவாய்ந்த TSI எனப்படும் டர்போசார்ஜ்ட் ஸ்ட்ராடிஃபையிட் இன்ஜெக்சன் இன்ஜினை கொண்டுள்ளது.
கோடியாக் RS எஸ்யுவி - விலை
முற்றிலுமாக உதிரி பாகங்களாக கொண்டுவரப்படும் வழக்கமான கோடியாக்கை போலில்லாமல், செயல்திறன் சார்ந்த இந்த எடிஷனானது முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதாம். எனவே இதன் விலை 55 லட்சம் முதல் 60 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை வரம்பில் கோடியாக் RS காரானது, எம்ஜி மெஜஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் ஆர்-லைன் மாடல்களுடன் உள்நாட்டில் போட்டியிடுகிறது.

கோடியாக் RS எஸ்யுவி - இன்ஜின் விவரங்கள்
கவனத்தை ஈர்கக்கூடிய இன்ஜின் விவரங்களை ஆராய்ந்தால், ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் வெர்ஷனானது, 2.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது. முன்னதாக ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலிலும் இதே இன்ஜின் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 265bhp மற்றும் 400Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. அதாவது வழக்கமான கோடியாக்கை காட்டிலும் கூடுதலாக 60bhp ஆற்றலை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த செயல்திறன் சார்ந்த எஸ்யுவி ஆனது ஆல்-வீல் ட்ரைவ் அம்சத்தையும் கொண்டிருக்குமாம்.

கோடியாக் RS எஸ்யுவி - செயல்திறன் விவரங்கள்
இடம்பெற்றுள்ள இன்ஜின் ஆப்ஷன் மூலம் கோடியாக் ஆர்எஸ் மாடலானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.3 விநாடிகளில் எட்டும் என ஸ்கோடா தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 231 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளதாம். அதன் செயல்திறனை மேலும் மேம்படுத்த ஸ்லாட் பிரேக் டிஸ்க்குகள் மற்றும் முன்-ஆக்சில் பொருத்தப்பட்ட இரண்டு-பாட் காலிப்பர்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் கூறுகள் இருக்கும். சர்வதேச சந்தைக்கான மாடலில் அடாப்டிவ் டம்பர்கள் நிலையாக கிடைத்தாலும், இந்தியா-ஸ்பெக் எடிஷனில் இருக்குமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கோடியாக் RS எஸ்யுவி - ஸ்போர்ட்டியர் டிசைன்
செயல்திறன் சார்ந்த இந்த எஸ்யுவியின் வெளிப்புறத்தில் ப்ளாக்ட் அவுட் க்ரில், திருத்தப்பட்ட முன்புற பம்பர், ப்ளாக்ட்-அவுட் C பில்லர், சிவப்பு ப்ரேக் கேலிபர்களுடன் புதியதாக வடிவமைக்கப்பட்ட 20 இன்ச் அலாய் வீல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. கோடியாக் ஆர்எஸ் மாடலின் ஸ்போர்டியர் தன்மையை மேம்படுத்தும் விதமாக வெளிப்புற ரியர் வியூ மிரரில் ப்ளாக்ட்-அவுட் ட்ரீட்மெண்ட், ரூஃப்ர் ரெயில்ஸ் மற்றும் விண்டோ ஃப்ரேம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
கோடியாக் RS எஸ்யுவி - உட்புற அம்சங்கள்
ஸ்போர்ட்டி தீமானது வெளிப்புறத்தை தாண்டி உட்புறத்திலும் தொடர்கிறது. அதன்படி, கேபினில் முற்றிலும் ப்ளாக் தீம் வழங்கப்பட்டு, அதற்கு நேர் எதிரான சிவப்பு நூலில் ஸ்டிட்சிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருக்கைகளில் ஹெட்ரெஸ்ட் பகுதிகளில் RS என ப்ராண்டிங் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடியாக்கிலிருந்து மேலும் வித்தியாசமானதாக காட்சியளிக்கிறது.























