மேலும் அறிய

Beetroot For Lips: என்ன செஞ்சாலும் உதட்டின் நிறம் கருப்பாவே இருக்கா? இதை டெய்லி ஃபாலோ பண்ணாவே போதும்..

உதடுகள் மென்மையாகவும், இளம் சிவப்பு நிறமாகவும் மாறுவதற்கு பீட்ரூட் சிறந்த அழகு சாதன பொருளாக செயல்படுகிறது.

தற்காலத்தில் சரும பராமரிப்புக்கென பல்வேறு பொருட்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. சருமத்தை பராமரிப்பது போல உதடுகளையும்  பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. சருமம் மட்டும் பொலிவாக இருந்து, உதடு வறட்சியுடன் வெடித்து காணப்பட்டால் முக அழகே கெட்டுவிடும். ஆகவே சருமத்திற்கு இணையாக உதடுகளையும் அழகுடன் மென்மையுடனும் பாதுகாக்க தெரிந்திருக்க வேண்டும்.

தற்போது அதிகளவிலானோர் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை தவிர்த்து, வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை முறையிலான அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் ,காய்கறிகள் ,பழங்கள் என இவை அனைத்துமே நாம் உடலுக்கு உட்கொள்ளும் போது நமக்கு ஊட்டச்சத்தை தருகிறது என்றால் ,அது சரும பராமரிப்பிலும் எவ்வளவு ஈடு இணையற்றதாக இருக்கும் என நாமே சிந்தித்து பார்க்கலாம் .ஆகவே நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் சரும பராமரிப்பிற்கு உகந்த பொருள் தான் என்பது அவற்றை பயன்படுத்தும் போதே தெரிந்து விடும்.

அப்படி நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க, நிறம்மிக்க  காய்கறி வகைகளில் ஒன்றுதான் இந்த பீட்ரூட். 

உதடுகள் மென்மையாகவும், இளம் சிவப்பு நிறமாகவும் மாறுவதற்கு பீட்ரூட் சிறந்த அழகு சாதன பொருளாக செயல்படுகிறது. முகத்திற்கு பேஷியல் பேக்குகளை பயன்படுத்துவது போல, உதட்டுக்கும் பராமரிப்பு என்பது அவசியமாகிறது. உதட்டை வெடிப்பிலிருந்து பாதுகாத்து ஒரு அழகான நிறத்திற்கு மாற்றுவதற்கு பலரும் முயற்சி செய்கிறார்கள். செயற்கையான லிப்ஸ்டிக்குகளை, நிறப் பூச்சிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையாகவே பீட்ரூட்டை பயன்படுத்தி வரும்போது உதடுகள் பளிச்சென்ற நிறத்தை பெறுகிறது.

பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிப்பதோடும் ஒரு நிறமூட்டியாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டை பொதுவாகவே சருமத்திற்கு நாம் பயன்படுத்தும் போது நன்கு பிரகாசமாக தெரியும். ஒரு மென்மையான சீரான நிறத்தை அளிக்க கூடியதாகும். உதடுகளில் படிந்துள்ள கருமை நிறத்தை போக்குவதில் பீட்ரூட்டில் உள்ள விட்டமின் சி சிறந்த முறையில் செயலாற்றுகிறது.

சிறந்த மாய்ஸ்ரைசராக இருக்கும் பீட்ரூட்டை தினம் தோறும் உதட்டுக்கு பயன்படுத்தி வந்தால் உதடுகள் மென்மையாகவும் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும். உதடுகளை மென்மையாக்கும் பீட்ரூட் அதிலுள்ள வெடிப்புக்கள், கருமை நிறம் மற்றும் கோடுகளை சரி செய்து இளமையான தோற்றத்தை வழங்கும்.

எப்போதுமே நன்கு ஈரப்பதத்தை வழங்கக்கூடிய உணவுப் பொருள்தான் பீட்ரூட் . இந்த பீட்ரூட் சாறை உதடுகள் மீது தொடர்ந்து தடவி வந்தால் நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதோடு, எப்போதும் ஒரு இளம் நிறத்துடன் ,மென்மையாக பளபளப்பாகவும் காட்சியளிக்கும். வறண்ட ,கருமை நிறம் கொண்ட உதடுகளுக்கு எந்த நிறத்திலும்  லிப்ஸ்டிக்ஸ் போட்டாலும் அது உரிய தோற்றத்தை வழங்காது. ஆகவே உதடுகளை பராமரிப்பதில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டி உள்ளது. என்னதான் செயற்கையான அழகு சாதன பொருட்களை உதடுகளுக்கு பூசினாலும் ,பீட்ரூட்டை போன்ற ஊட்டச்சத்து மிக்க, இளம் சிவப்பு நிறத்தை தரக்கூடிய இயற்கையான பொருளுக்கு ஈடு இணை வேறு எதுவும்  இல்லை என சொல்லப்படுகிறது.

உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் பீட்ரூட் :

உதடுகளில் நீர் தன்மை  இல்லாததால் தான் வறண்டு வெடிப்பு ஏற்படுகிறது. ஆகவே அதிக நீர்ச்சத்துக் கொண்ட ஒரு உணவுப் பொருளாக இருக்கும் பீட்ரூட் , சிறந்த நிறமூட்டியாக இருப்பது மட்டுமல்லாமல் உதட்டை எப்போதுமே ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். பீட்ரூட்டில் உள்ள ஊட்டமளிக்கும் பண்புகள் சருமத்தின் அடுக்குகளில் ஆழமாகச் சென்று உதடுகளுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இது உதடுகளை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.

சிறந்த நிறமூட்டியாக செயல்படும் பீட்ரூட்:

வறண்டு, வெடித்த உதடுகள் எப்போதும் ஒரு கருமையான நிறத்துடனே காணப்படும். அதற்கு என்னதான்  செயற்கை முறையிலான அழகு சாதன பொருட்களைக் கொண்டு மூடி மறைத்தாலும் சற்று நேரம்தான், அதன் பின்னர் மீண்டும் அது பழைய நிலைமைக்கு தான் திரும்பிவிடும். ஆகவே இயற்கையாக உதட்டின் நிறத்தை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு உகந்த ஒரு பொருள்தான் பீட்ரூட். மேலும், உதடுகளை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு மென்மையான, இளஞ்சிவப்பு நிறத்தை வழங்குகிறது. இது பயன்படுத்த தொடங்கிய ஒரு வாரத்திற்குள் உதட்டில் நல்ல மாற்றங்களை காணலாம். உதடுகள் சற்று நிறம் மாறி நன்கு பிரகாசமாக இருக்கும்.

சருமத்தில் இறந்த செல்களை அகற்றும் பீட்ரூட்: 

உதடுகளில் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்பட மற்றும் ஒரு முக்கிய காரணம்  அதில் உள்ள இறந்த சரும செல்கள் ஆகும். பீட்ரூட் இயற்கையான முறையில் இறந்த செல்களை நீக்கி  புத்துயிர் அளிக்கிறது. உதடு வறட்சியை சரி செய்து மென்மையான ,அழகான இளஞ்சிவப்பு உதட்டை இது வழங்குகிறது. உதடு இயல்பு நிலைக்கு  திரும்பும்போது  பயன்படுத்தும் உதட்டுச் சாயங்களும் மேலும் அழகூட்டும்.

உதடுகளை மிருதுவாகவும்  அழகாகவும் மாற்றும் பீட்ரூட் :

 பீட்ரூட்டில் ஏராளமான ஊட்டமளிக்கும் பண்புகள் உள்ளன. அவை உதடுகளுக்கு ஈரப்பதமளிப்பதோடு, நன்கு ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. உதட்டுக்கு பீட்ரூட் சாறு தொடர்ந்து பூசி வரும்போது நன்கு மிருதுவான மற்றும் அழகான நிறம் கொண்ட உதடுகளை பெற முடியும். தொடர்ந்து ஒரு துண்டு பீட்ரூட்டை உதடுகளில் பூசிவர இந்த நன்மைகளை வெகு சீக்கிரமாக பெற முடியும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget