News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Egg Diet Plan : உடல் எடையை குறைக்க 7 நாள் முட்டை உணவு நல்லதா? : நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்த ஒரு வார முட்டை உணவுத் திட்டத்தைப் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம்.

FOLLOW US: 
Share:

எடை குறைப்பு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட சொல். உட்கார்ந்த இடத்திலான வாழ்க்கை முறைகள், நொறுக்குத் தீனிகள் மற்றும் ஒழுங்கற்ற தூங்கும் பழக்கம் ஆகியவற்றால், உடல் பருமன் மிகவும் பொதுவானதாகிவிட்டது. இந்த நிலையை மாற்றியமைத்து மீண்டும் மெலிதான உடலைப் பெறுவது மிகவும் கடினம் மற்றும் சில நேரங்களில் சாத்தியமற்றது. இருப்பினும், உங்கள் உணவில் மாற்றம் கொண்டு வருதல் மற்றும் உங்கள் பழக்கவழக்கங்களில் சில கட்டுப்பாடுகள் உங்களை மீண்டும் உங்கள் கட்டுக்கோப்பான உடல் எடைக்குக் கொண்டு வரலாம். உடல் எடை குறைக்க பல்வேறு டயட் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன அப்படியான உணவுத் திட்டங்களில் ஒன்று 7 நாள் முட்டை உணவு. இந்த ப்ளான், பெயர் குறிப்பிடுவது போல் உடல் எடையை குறைக்க பல்வேறு வடிவங்களில் முட்டைகளை சேர்க்கிறது. இந்த ஒரு வார முட்டை உணவுத் திட்டத்தைப் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம்.

ஒரு வார முட்டை உணவு திட்டம் என்றால் என்ன?

நமக்கு கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டையும் ஒன்று. அவை புரதம் நிறைந்தவை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள் குறைவாக உள்ளன. ஒரு வார முட்டை உணவுத் திட்டமானது, தண்ணீர், சர்க்கரை அல்லாத திரவங்கள் மற்றும் பிற கார்போஹைட்ரேட் உணவுகளுடன் முட்டை உணவை உள்ளடக்கியது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முட்டைகளை சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதோடு, உடலுக்கு சரியான அளவு புரதத்தையும் வழங்குவதாக பல்வேறு வடிவங்களில் கூறப்படுகிறது.

ஒரு வார முட்டை உணவு உண்மையில் வேலை செய்யுமா?
காலை உணவாக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் நாளை தொடங்குவதற்கான சரியான வழியாக இருக்கலாம்! இருப்பினும், ஒரு வாரத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முட்டைகளை உட்கொள்வது தவறான யோசனையாகத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு வாரத்திற்கு முட்டை உணவை உட்கொள்வது எப்படி என்கிற வழிமுறைகளை நீங்கள் கவனித்தால் உங்கள் உடலில் நம்பமுடியாத அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வரும்.

ஒரு வார முட்டை உணவின் நன்மைகள்:

7 நாள் முட்டை உணவைப் பின்பற்றுவதன் சில முக்கிய நன்மைகள் பின்வருமாறு:

உடல் பருமனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட பிசிஓஎஸ் அறிகுறிகளை மாற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் டியை முட்டைகள் வழங்க உதவுகின்றன. முட்டையில் பயோட்டின் உள்ளது, இது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை விரைவுபடுத்துவதற்கும் சரியான செரிமானத்தை உறுதி செய்வதற்கும் தேவையான ஒரு முக்கிய உறுப்பு ஆகும். முட்டையில் வைட்டமின் ஈ உள்ளது, இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மிகவும் அவசியமான உணவாக அமைகிறது. முட்டைகளை தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. புரதச்சத்து நிறைந்துள்ளதால், முட்டை தசைகளை வலுப்படுத்தவும், உடற்பயிற்சியின் மூலம் அவற்றை குறைக்கவும் உதவும்.

ஒரு வார முட்டை டயட் திட்டம், அதிக புரத உள்ளடக்கம் கொண்ட விரைவான எடை இழப்பு முறையாகும். இருப்பினும், ஒரு நேரத்தில் 2 வாரங்களுக்கு மேல் இதனைத் தொடர வேண்டாம். இது தவிர, பக்கவிளைவுகளைத் தவிர்க்க, உணவில் சில முன்நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். 

அதாவது, உப்பு உட்கொள்ள வேண்டாம், அதற்கு பதிலாக வேறு மாற்றைப் பயன்படுத்தவும்.
மருத்துவ ரீதியாக ஒவ்வொரு நாளும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
எந்த பானங்களிலும் கிரீம் அல்லது சர்க்கரை சேர்க்க வேண்டாம்.
சாலட் காய்கறிகளில் தக்காளி, கீரை மற்றும் செலரி/வெள்ளரி ஆகியவை மட்டுமே உட்கொள்ளவும்.
காய்கறிகளை வேகவைத்து வடிகட்ட வேண்டும், வினிகர்/எலுமிச்சை சாறு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
லீன் வைட் இறைச்சி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
உணவுக்கு இடையில் சாப்பிடக்கூடாது மற்றும் ஒவ்வொரு உணவிற்கும் நேரத்தை பராமரிக்கவும்.
எந்த உணவையும் தவிர்க்காதீர்கள்.
உணவின் போது மது அருந்தக்கூடாது.
நீங்கள் சிறிய உருவம் கொண்ட நபராக இருந்தால் 1 முட்டை, மற்றவர்களுக்கு 2 முட்டைகள் உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Published at : 17 Oct 2022 07:57 AM (IST) Tags: Egg egg diet plan 7 days egg

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்

Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!

போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!