Weight Loss Diet Chart: உடல் எடையை குறைக்கணுமா? இந்த உணவு முறையை பாலோ பண்ணுங்க!
உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஒல்லியான அல்லது அளவான உடல் வாகுடன் சிக்கென இருக்கவே நாம் எல்லோரும் விரும்புவோம். உடல் பருமனாக உள்ளவர்களுக்கு தங்களின் உடல் எடையை குறைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதற்காக சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்க்கொள்வதுடன், டயட்டைப் பின்பற்றுகின்றனர். எடை இழப்பு, எடை இழப்புக்கு உங்கள் உணவு அட்டவணையில் செய்ய வேண்டிய 5 ஸ்மார்ட் மாற்றங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
1. நார்ச்சத்து உணவுகளை அதிகரிக்க வேண்டும்:
உடல் எடையை குறைக்கும் உணவில் நார்ச்சத்துக்களை சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக, நீங்கள் 30 வயதிற்குள் நுழையும்போது நார்ச்சத்துகளை சேர்த்துக்கொள்ள வேண்டியது இன்னும் முக்கியமானதாகிறது.
வயதாகும்போது, நமது வளர்சிதை மாற்றம் இயற்கையாகவே குறைக்கிறது. மேலும் இது நமது செரிமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவில் நார்ச்சத்து நிறைந்த பழம் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கும் என சொல்லப்படுகின்றது.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதனை உண்பவர்களின் பசியைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் உங்கள் 30 வயதிற்குப் பிறகு உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது. இந்த உணவுகள் உடல் பருமனுக்கு வழிவகுப்பதுடன், உங்கள் செல்கள் முதுமை அடைவதை விரைவுபடுத்தும் என்று கூறப்படுகிறது.
3. Fad டயட்டை தவிர்க்கவும்:
சிலர் உடல் எடை குறையும் வரை அல்லது சிறிது காலம் மட்டும் டயட்டில் இருந்து விட்டு பின்னர் அதை பின்பற்றாமல் விட்டு விடுகின்றனர். இது முழுமையான பலனை அளிக்காது. எடையை குறைப்பதற்கான உணவு அட்டவணயில் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். 30 வயதிற்குப் பிறகு உங்கள் எடை இழப்பு உணவு நீங்கள் தொடர்ந்து பின்பற்றக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்து உடல் எடையை குறைப்பதன் மூலம் நீண்ட காலம் இதை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
4. அதிக கால்சியம் உணவை தேர்ந்தெடுங்கள்:
கால்சியம் பொதுவாக எலும்பு அடர்த்தியுடன் தொடர்புடையது. ஆனால் உங்கள் உடல் எடையை குறைப்பதிலும் கால்சியமும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? .உணவு அட்டவணையைத் திட்டமிடும்போது முடிந்தவரை கால்சியத்தை சேர்க்க முயற்சிபதன் மூலம் உங்கள் எடையை குறைக்கவும், உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
5. மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்:
மது அருந்துவதால், அதிகப்படியான கலோரிகள் காரணமாக உங்கள் எடையை குறைக்க இது தடையாக இருப்பதுடன், உடல் நல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. அதிகமாக மது அருந்துவது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனநிலைக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. நமக்கு வயதாகும்போது நம் உடலுக்கு அதிக கவனிப்பும் ஊட்டச்சத்தும் தேவைப்படுகிறது, எனவே உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உங்கள் உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.