News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Food Tips : ஸ்நாக்ஸா தினமும் பானிபூரி சாப்பிடுறீங்களா? இதை கொஞ்சம் படிங்க..

புரதம் நிறைந்த வேர்க்கடலையில் தயாரிக்கப்படும் மாலை வேலை சிற்றுண்டிகள்

FOLLOW US: 
Share:

மாலை வேளையில்  ஒரு கப் டீயுடன்  கொறிப்பதற்கு வடை,பஜ்ஜி,சுண்டல்,கடலை,மசாலா பொரி,பிஸ்கட்  அல்லது  சிறிதாக  ஒரு டிபன் என்று  இந்தியாவைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவை பொறுத்த வரை மாலை வேலையானது  டீயுடன் இப்படித்தான் கழிகிறது.

இப்படி சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒரே மாதிரியாக இருப்பதற்கு பதிலாக,சிறிது வேறுபாட்டுடனும்,புரோட்டீன்கள் நிறைந்த உணவாகவும் இருந்தால், இன்னும் நம் உடலுக்கு சிறப்பானதாக இருக்கும்.அந்த வகையில் வேர்க்கடலையில் தயாரிக்கப்படும் மாலை வேலை சிற்றுண்டிகளை நாம் இங்கு காணலாம்.


மசாலா வேர்க்கடலை:

இதற்கு நீங்கள் நன்கு வருத்த வேர்க்கடலை எடுத்துக்கொண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம்,சிறிது தக்காளி,புதினா இலைகள்,சிறிது மல்லி இலைகள், காரத்திற்கு தேவையான அளவு மிளகாய் பொடி மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சிறிது நெய் என அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கலந்து எடுத்தீர்களேயானால்,இத்தகைய மசாலா வேர்க்கடலை தயாராகிவிடும். இதை நீங்கள் டீயுடன் சுவைப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.இதில் இருக்கும் வெங்காயம் மற்றும் புதினா போன்றவை உங்கள் செரிமானத்திற்கு சிறந்ததாகவும் இருக்கும்.


வேர்க்கடலை சுண்டல்:

இந்த வேர்க்கடலை சுண்டலும் கூட உங்கள் டீயின் சுவையை இன்னும் அதிகமாக்கும்.இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான அளவிற்கு அவித்த வேர்க்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது தேங்காய் துருவலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் தேவையான அளவு எடுத்து,அதில் கடுகு இட்டு தாளித்துக் கொண்டு, சிறிது கருவேப்பிலையையும் இட்டு, காரத்திற்கு காய்ந்த மிளகாய் ஒன்று இரண்டை அதில் போட்டு,பொறித்து எடுத்த பின் இந்த கலவையில் அவித்து வைத்திருக்கும் வேர்க்கடலையை கொட்டி,  வேர்க்கடலை சிறிது சூடானதும், தேங்காய் துருவலை இட்டு நன்றாக வதக்கி எடுத்தீர்களேயானால், வேர்க்கடலை சுண்டல் தயாராகிவிடும்.


பாலாடை கட்டி வேர்க்கடலை:

என்ன இது பாலாடை கட்டி வேர்க்கடலையா? ஆம் உங்களுக்கு அவித்த வேர்க்கடலை பிடிக்கும் என்றால்,இந்த உணவு பொருளை தயாரிப்பதற்கு அவித்த வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம்,அல்லது உங்களுக்கு வருத்த கடலை பிடிக்கும் என்றால், வறுத்த கடலையையும் நீங்கள் இதில் முயற்சி செய்யலாம். முதலில் நல்லெண்ணையை விட்டு கடுகை தாளித்த பின்,நறுக்கிய வெங்காயம்,உங்களுக்கு தேவைப்பட்டால் சிறிதாக நறுக்கிய தக்காளி,சிறு சிறு பொடிகளாக நறுக்கப்பட்ட மல்லி இலைகள் என இவற்றை வதக்கி, அதில் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொண்ட,பாலாடை கட்டி சேர்த்து வதக்கிய பின்,நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அவித்த அல்லது வறுத்த வேர்க்கடலையை ஈட்டு இப்போது அதனுடன் மிளகாய் தூளையும் உப்பையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தீர்களேயானால், சுவை மிகுந்த பாலாடைக்கட்டி வேர்க்கடலை தயாராக இருக்கும்.

வேர்க்கடலை மற்றும் வெள்ளரிக்காய் சாலட்

 வெள்ளரிக்காய் மற்றும் வேர்க்கடலை சாலட்டை தயாரிப்பதற்கு,வறுத்த வேர்க்கடலையை ஆகச் சிறந்ததாக இருக்கும். சாலட்டை தயாரிக்க தேவையான அளவு வேர்கடலை எடுத்துக்கொண்டு,சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கப்பட்ட வெள்ளரிக்காயை,அதனுடன் கலந்து, அதில் பச்சை வெங்காயம், மல்லி தழைகள்,புதினா தழைகள், கருவேப்பிலை தழைகள், தேவைப்பட்டால் தக்காளி மற்றும் எண்ணெய் பசைக்கு சிறிதாக நெய், காரத்திற்கு மிளகு தூள், தேவைக்கேற்ப உப்பு என அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்துக் கொண்டீர்களானால், வேர்க்கடலை மற்றும் வெள்ளரிக்காய் கலந்த இந்த சாலட் தயாராகிவிடும். ் இதில் தேவைப்பட்டால் அண்ணசி பழ துண்டையும் நீங்கள் சேர்த்துக்கொண்டால் இந்த சாலட் இன்னும் மிகுந்த சுவையோடு இருக்கும். இப்படியாக டீயுடன் உங்கள் மாலை வேலையை, புரதம் நிறைந்து காணப்படும் வேர்க்கடலையை கொண்டு நிறைவு செய்யுங்கள்.

Published at : 29 Aug 2022 06:53 AM (IST) Tags: evening Tea rich snacks protein peanut

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?