மேலும் அறிய

உங்களால் ஒற்றைக் காலில் 10 விநாடிகள் நிற்க முடியவில்லை? 10 ஆண்டுகளில் இந்த அபாயம் - அதிர்ச்சி தந்த ஆய்வு..

ஆய்வில் ஒற்றைக் காலில் நிற்க போராடி தோற்றவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழப்பதற்கு 84% வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசன் இதழில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வு முடிவின்படி, குறைந்தபட்சம் 10 வினாடிகள் ஒரு காலில் நிற்க முடியாத நடுத்தர வயதுடையவர்கள் ஒரு தசாப்தத்திற்குள் அல்லது அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இறக்கும் அபாயம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் சமநிலை திறன்

மக்கள் தங்கள் 60 வயதை அடையும் வரை தங்கள் உடல் சமநிலைத் திறனைப் பராமரிக்க முனைவர். அதன் பின்னர் இந்தத் திறன் வேகமாகக் குறையத் தொடங்கும்.

இந்நிலையில், இந்த ஆய்வில் ஒற்றைக் காலில் நிற்க போராடிய தன்னார்வலர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழப்பதற்கு 84% வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி முடிவுகள்

2009ஆம் ஆண்டு தொடங்கி பிரேசிலில் 50 வயதுக்கு மேற்பட்ட 1,702 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஆய்வில் இருந்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் தங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கி மற்றொரு காலின் பின்னால் தூக்கியபடி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

இவர்களில் பொதுவாக வயதானவர்களும் மோசமான உடல்நிலை உள்ளவர்களும் என ஐந்தில் ஒருவர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் பலன்

பிரேசில், பின்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வயதானவர்களுக்கு வழக்கமான மேற்கொள்ளப்படும் உடல் பரிசோதனையில் உடல் சமநிலை குறித்த இந்த சோதனையை நடத்துவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 6,80,000க்கும் மேற்பட்ட மக்கள் கீழே விழுந்து அதன் பக்க விளைவுகளால் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், இந்த 10 வினாடி சோதனை எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை அடையாளம் காண உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆய்வில், தேர்வில் தோல்வியடைந்தவர்களிடையே இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது எனினும் இதற்கான எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் கண்டறியப்படவில்லை.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Embed widget