மேலும் அறிய

Clock and Watches : கடையில் எல்லா கடிகாரங்களும் 10:10 நேரத்தை காட்டுவது ஏன்? கட்டுக்கதைகளும், உண்மை காரணமும்!

பலர் பல மூட நம்பிக்கையுடன் தொடர்பு படுத்துகின்றனர், சிலர் அதை போர் மற்றும் இறப்புகள் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இதில் எது பொய் எது உண்மை? தெரிந்துகொள்வோம்!

கடிகாரங்கள் வாங்க கடைக்குச் செல்லும்போது, எல்லா கடிகாரங்களும் 10:10 என்று நேரம் காண்பிப்பதை எல்லோரும் கவனித்திருப்போம். ‘வாட்ச்’ என்ற வார்த்தையுடன் நீங்கள் கூகிளில் தேடினாலும், தேடல் முடிவுகளில் பெரும்பாலான கடிகாரங்கள் அதே நேரத்தை தான் காண்பிக்கும். இது ஏன் என்று பலரும் யோசித்திருப்போம், நாம் கேட்ட பலரும் பல காரணங்களை நமக்கு சொல்லியிருப்பார்கள். பலர் பல மூட நம்பிக்கையுடன் தொடர்பு படுத்துகின்றனர், சிலர் அதை போர் மற்றும் இறப்புகள் போன்ற சம்பவங்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இதில் எது பொய் எது உண்மை? தெரிந்துகொள்வோம்!

கண்டுபிடித்தவர் இறந்த நேரம்

கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் 10:10 என்ற நேரத்தில் இறந்தார் என்று வார்த்தைகள் சுற்றி வருகின்றன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடிகாரங்கள் 10:10 ஐக் காண்பிக்க அமைக்கப்பட்டுள்ளன என்று கூறுவார்கள். ஒரு சிலர் கடிகாரம் கண்டுபிடித்த நேரம் அது என்றும், அதனால் அதை வைத்துதான் அவர் ஆரம்பித்தார் என்றும் கூறுகிறார்கள். 

உண்மை: இவையாவும் காரணமாக இருக்க வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் கடிகாரம் ஒரு நேரத்தில் ஒரே ஒருவரால் மட்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. 17 ஆம் நூற்றாண்டில் முதல் ஊசல் கடிகாரத்தை கண்டுபிடித்த டச்சு கணிதவியலாளர் கிறிஸ்டியன் ஹ்யூஜென்ஸ் பெயரை பொதுவாக கூறுவார்கள், ஆனால் அதன் பின் பல மாறுதல்களை கண்டுதான் கடிகாரம் உருவானது. அந்த முதல் ஊசல் கடிகாரத்தை ஹ்யூஜென்ஸ் கண்டுபிடித்த சரியான நேரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதையும் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

Clock and Watches : கடையில் எல்லா கடிகாரங்களும் 10:10 நேரத்தை காட்டுவது ஏன்? கட்டுக்கதைகளும், உண்மை காரணமும்!

அமெரிக்க ஜனாதிபதி இறந்த நேரம்

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அந்த நேரத்தில் இறந்ததால் பெரும்பாலான கடிகாரங்கள் மற்றும் கடிகார புகைப்படங்கள் மேற்கூறிய நேரத்தைக் காட்டுகின்றன என்று அமெரிக்கர்கள் கூறுகின்றனர். இது ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் மரண நேரம் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் இருவரும் படுகொலையால் திடீரென மரணம் அடைந்ததால், அவர்களின் இறப்பு நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று பொதுவாக கூறப்படுகிறது. மற்றொரு கோட்பாடு, அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தின் முகமாக இருந்த சின்னமான அமெரிக்க ஆளுமை டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இறந்த நேரம் என்று கூறுகிறது.

உண்மை: மேற்கூறிய ஜனாதிபதிகள் இருவர் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் 10:10 மணிக்கு இறக்கவில்லை. ஜனாதிபதி லிங்கன் இரவு 10:15 மணிக்கு படுகொலை செய்யப்பட்டு காலை 7:22 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. கென்னடி மதியம் 12:30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார், மதியம் 1:00 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டார். மார்ட்டின் லூதர் கிங் மாலை 6:01 மணிக்கு படுகொலை செய்யப்பட்டு இரவு 7:05 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டர்.

தொடர்புடைய செய்திகள்: Ungalil Oruvan CM Stalin : ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை.. உங்களில் ஒருவன் கேள்விக்கு முதலமைச்சர் பதில்!

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி

ஆளுமைகள் மட்டுமல்ல, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணு குண்டுவெடிப்பின் போது அப்பாவி உயிர்களின் பேரழிவு இழப்புடன் 10:10 இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்கா ஜப்பான் மீதான இந்த கொடூரமான தாக்குதலை இழுத்தது. 10:10 என்பது அணு வெடிகுண்டுகளில் ஒன்று பேரழிவிற்காக கைவிடப்பட்ட நேரம் என்று கோட்பாடு கூறுகிறது.

உண்மை: உண்மை என்னவென்றால், ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945 அன்று, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது முறையே காலை 8:15 மற்றும் 11:02 மணிக்கு அணு குண்டுகள் பாய்ச்சப்பட்டன.

Clock and Watches : கடையில் எல்லா கடிகாரங்களும் 10:10 நேரத்தை காட்டுவது ஏன்? கட்டுக்கதைகளும், உண்மை காரணமும்!

'V' என்றால் விக்டரி (வெற்றி)

'V' என்ற எழுத்து நேர்மறை மற்றும் நம்பிக்கையின் உணர்வைக் குறிக்கிறது மற்றும் வெற்றியின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. கடிகாரம் 10:10 என காட்டும்போது இரு முள்களும் 'V' என்ற எழுத்தை காண்பிக்கின்றன. அதனால் பயன்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.

உண்மை: இந்த கோட்பாட்டை பொய்யென்று புறக்கணிக்க, எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் அது மட்டுமே முழுமையான உண்மை என்று உறுதியாக கூற முடியாது.

உண்மை காரணம் என்ன?

10:10 பின்னால் உள்ள உண்மை

காரணம் எளிதானது, எளிமையான காரணம் என்னவென்றால் அழகியல் மற்றும் தெளிவுதான். ஒரு காரணம் என்னவென்றால், கடிகாரத்தின் எல்லா குறிகளும் 10:10 மணிக்கு தெளிவாகத் தெரியும். முட்கள் ஒன்றுடன் ஒன்று அல்லது நெருங்கி வராமல் இருக்கும், எனவே அவற்றின் வடிவம் மற்றும் வடிவமைப்பைக் காண்பிப்பதற்கான சிறந்த வழி இது. பிராண்டுகள் அவ்வாறு செய்ய மற்றொரு காரணம், அவர்களின் லோகோ அல்லது பெயர் நடுவில்தான் குறிப்பிடப்பட்டு இருக்கும், அது மறையாமல் இருக்க அப்படி செய்திருக்கலாம். மேலும் இரு முட்களுக்கு நடுவில் இருக்கும்போது லோகோ இன்னும் தெளிவாக, அழகாக காட்சியளிக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு சில கடிகாரங்களில் தேதி, நாள், மற்றும் பிற குறியீடுகள் கொண்ட பகுதி ஆறு, மூன்று, ஒன்பது ஆகியவற்றை ஒட்டி இருக்கும். அது மறையாமல் இருக்க பொதுவாக இந்த நேரத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: 206 ரன்கள் இலக்கு.. பேட்டிங்கை தொடங்கியது ஆஸ்திரேலியா!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய சொன்னாரா ஆர்.என்.ரவி? ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
NEET:
NEET: "நீட்டை ஒழிக்க வேண்டும்.. தேர்வுகளை மாநிலங்களே நடத்த வேண்டும்" திமுகவை பின்பற்றும் மம்தா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
சோகம்! நெட்டிசன்கள் கேலியால் குப்பைகளை சேமிக்கும் முதியவர் தற்கொலை - எங்கே இது?
சோகம்! நெட்டிசன்கள் கேலியால் குப்பைகளை சேமிக்கும் முதியவர் தற்கொலை - எங்கே இது?
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Embed widget