Ayurveda Tips : அவ்வளவும் ஆரோக்கியம்! 'சுக்கு'ல இருக்கு சூப்பரான பலன்கள்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் உகந்த ஒரு உணவுப் பொருளாகவும் மற்றும் மருந்து பொருளாகவும் சுக்கு விளங்குகிறது
இஞ்சி என்பது தென்னிந்திய சமையல்களில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான மசாலா பொருளாகும். இது பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகையைச் சார்ந்தது. தேனீரில் சுவைக்காக சேர்ப்பதில் இருந்து, உணவுகளில் காரணத்திற்காகவும், நோய் எதிர்ப்பு தன்மைக்காகவும் என பல விஷயங்களுக்கு இந்த இஞ்சி ஆனது பயன்படுகிறது.
இஞ்சில் உள்ள ஈரத்தை நீக்க அதை காயவைத்து உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதன் மூலம் வருடம் முழுவதும் பயன்படுத்தும் விதமாக இஞ்சானது சுக்காக மாறிவிடுகிறது. சித்த வைத்தியத்தில் கூட சுக்குக்கு ஆகச்சிறந்த இடம் இருக்கிறது இதே போலவே வீட்டில் பாட்டி வைத்தியத்திலும் கூட சுக்கானது தமிழக இல்லங்களில் முக்கிய பொருளாக இருக்கிறது
சிறு குழந்தைகள் வயிற்று வலியால் அவதி படும்போது சிறேனும் சுக்கை இழைத்து பாலில் கலந்து கொடுப்பார்கள். இப்படியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் உகந்த ஒரு உணவுப் பொருளாகவும் மற்றும் மருந்து பொருளாகவும் சுக்கு விளங்குகிறது மேலும் கீழ்கண்ட நன்மைகள் சுக்கினால் நமக்கு கிடைக்கிறது.
சளியைக் குறைக்கிறது:
உலர்ந்த இஞ்சி எனப்படும் சுக்கானது கபத்தினை குறைக்கிறது.உலர் இஞ்சி நீர் பருவகால காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மேல் சுவாசக்குழாய் கோளாறுகளில் இருந்து நம் உடம்பை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுகிறது செயல்படுகிறது
ஆகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும் சுக்கு.
சுக்கு உலர்ந்த ஒரு பொருளாக இருந்தாலும் கூட இது ஆகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் சுக்கு நீரை உணவு அருந்திய பின் அருந்தும் பொழுது,இது ஆகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
தோல் நீக்கிய சுக்கினை நன்றாக தூளாக்கி பசும்பாலில் நன்கு கொதிக்க வைத்து காலை மற்றும் இரவு என அருந்தி வர வாயு தொல்லைகள் நீங்குகிறது.
இதைப்போலவே சுக்குபற்றானது தலைவலியை குணமாக்குகிறது. சுக்கை நீரில் இழைத்து. இந்த விழுதை நெற்றியில் பத்திட தலைவலி நீங்குகிறது.
சுக்கு,கடுக்காய்த்தோல் மற்றும் இந்துப்பு ஆகியவற்றை சமமான அளவு பொடி செய்து பற்பொடியாகப் பயன்படுத்தலாம். பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு தீரும்.
சுக்கு, மிளகு, பூண்டு மற்றும் வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள கிருமிகள் அழியும்.
சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய அரைத்து,அந்த விழுதை கை கால் மூட்டுகளில் தடவி வர, கைகள் மூட்டுகளில் நிலவி வரும் வலிகள் மறையும். சுக்குடன் வெற்றிலையை மென்று தின்று வர வாயு தொல்லைகள் முற்றிலுமாக நீங்கும். எலுமிச்சை சாற்றுடன் சுக்குத்தூளை கலந்து குடித்து வர பித்தம் முற்றிலுமாக தனியும்.
சுக்கு,மிளகு,திப்பிலி, தனியா மற்றும் சித்தரத்தை இவற்றை கஷாயம் வைத்து பருகி வர கடுமையான சளியானது குணமாகும்.
சுக்குப்பொடியுடன் சிறிதளவு உப்பை சேர்த்து தினமும் பல் துலக்கி வர வாய் துர்நாற்றம் ஈறு பிரச்சனைகள் முழுவதுமாக நீங்கும்.
இன்றைய காலகட்டத்தில் வேலையின் காரணமாக மிகுந்த மன அழுத்தமும் தூக்கமின்மையும் அனைத்து மக்களும் சந்திக்கும் பிரச்சினையாக இருக்கிறது. இதனால் வாயு பிரச்சனை அதிகரிக்கிறது. இவற்றிற்கு சுக்கு ஆகச்சிறந்த தீர்வாக இருக்கிறது சுக்கு ஒரு கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை உடன் சேர்த்து தண்ணீர் கலந்து பார்க்கும் பொழுது வாயு தொல்லையானது முற்றிலும் நீங்குகிறது.
சிறுநீரக தொற்றை சரி செய்யும் தன்மை சுக்கிற்கு உண்டு. உங்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு இருந்தால் சுக்குத்தீலை சிறிதளவு எடுத்து வெதுவெதுப்பான பாலில் நாட்டு சர்க்கரை கலந்து குடித்து வர நாள்பட்ட சிறுநீர் தொற்று குணமாகும்
வெற்றிலை மிளகு மற்றும் சுக்கு மூன்றையும் மென்று தின்று நீர் அருந்தினால் விஷக்கடி பூரான் மற்றும் பூச்சிக்கடியினால் ஏறி இருக்கும் விஷமானது இறங்கத் தொடங்கும் ஆகையால் இப்படி அனைத்து விதத்திலும் சிறப்பான இந்த சுக்கினை மேற்கண்ட பொருட்கள் உடன் கலந்து சாப்பிட்டு அதற்கான பலனை பெறுங்கள் ஒருவேளை அப்படி தனிப்பட்ட முறையில் சுற்றி எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் வீட்டில் சுக்கு குழம்பு வைத்து வாரம் ஒருமுறை எனும் சாப்பிட்டு சுக்கின் முழு பயணையும் பெறுங்கள்.