Health Tips :சாப்பிடும் நேரங்களில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? - தெரியுமா உங்களுக்கு?
உணவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உணவுடன் தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமான அமைப்பை மோசமாக பாதிக்கும் என்று பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது. மேலும்,நமது உடலானது ஊட்டச்சத்தை உறிஞ்சுவதை தண்ணீர் மெதுவாக்குகிறது, அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை மக்கள் எப்போதும் கொண்டுள்ளனர்.
ஆனால் அது உண்மையா? மக்களின் உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வின் மத்தியில், உணவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நமது உணவில் ஏற்கனவே நிறைய திரவம் உள்ளது, அது நன்றாக வேலை செய்கிறது. மேலும் சாலட்டுகள் பற்றி பார்க்கும் போது அவை நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இதைப்போலவே சூப்புகளிலும் தண்ணீரானது நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்திய உணவுகளில் குறிப்பாக தமிழக உணவுகளில் காய்கறிகள் தொடுகரிகளாக பயன்படுகிறது. இந்த காய்கறிகள்,மெல்லும் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. இந்த காய்கறிகளே "வெளிப்படையான தண்ணீர்" என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழர் உணவு பழக்கத்தில் ரசத்திற்கும் கடைசியாக மோருக்கும் ஒரு தனி இடம் உண்டு. இவை இரண்டுமே நீ நீர் சத்துக்கள் நிறைந்தது என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும்
உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்தாமல் இருந்தால் நீரிழப்பு சராசரி மக்கள் ஒவ்வொரு நாளும் 3 அல்லது 4 லிட்டர் தண்ணீரை உட்கொள்ள முடிவதில்லை. இது "நீரிழிவு நீண்டகால மலச்சிக்கல், அமிலத்தன்மை, சிறுநீரக கற்கள், யுடிஐக்கள் போன்றவை அதிகரித்த வாய்ப்புகள் ஏற்படுத்தி மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவு உண்ணுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது என்பது நீங்கள் உண்ணும் உணவின் அளவை குறைத்து விடும் என்பதால் தண்ணீர் குடிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும்’ ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. தாகம் எடுக்கும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இன்று நாம் வேலை பார்க்கும் சூழல், குளிரூட்டப்பட்ட அறைகளில் தாகம் எடுப்பதே இல்லை. அதற்காக தாகம் எடுக்கும்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. ஆனால், குறைவாகக் குடிப்பதால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன. சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கண்டிப்பாக நீங்கள் தண்ணீர் அருந்துவது உங்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காது என்று நிபுணர்களால் சொல்லப்பட்டிருக்கிறது