Shampoo Ingredients | `நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவரா?’ - அப்போ இதைத் தவறாம படிங்க!
நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் இதனைப் படிக்க வேண்டும். ஷாம்பூவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதிப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் பிற்காலத்தில் ஏற்படும்.
உங்கள் அழகின் மிக முக்கிய பகுதியாக விளங்குவது உங்கள் தலைமுடி. உங்கள் முடி சரியாக சீவப்பட்டு, அலங்கரிக்கப்படும் போது, நீங்கள் அழகாகவும், தன்னம்பிக்கையுடன் உணர முடியும். அதனால், பரிந்துரைக்கப்படவில்லை என்ற போதும், தலைமுடியைத் தினமும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக முடியை ஷாம்பூவால் சுத்தம் பயன்படுத்துவோர் பலர். நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் இதனைப் படிக்க வேண்டும். நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துவதற்கு வெவ்வேறு காரணங்கள் உங்களுக்கு இருந்தாலும், ஷாம்பூவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதிப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் பிற்காலத்தில் ஏற்படும்.
சரும நிபுணரும் மருத்துவருமான ஜெய்ஸ்ரீ ஷரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் தலைமுடியின் வகைக்கு ஏற்ப தினமும் ஷாம்பூ பயன்படுத்துவது குறித்து கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், `தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவர் என்றால் இயற்கை முறையில் பின்விளைவுகளை ஏற்படுத்தாத பொருள்களைப் பயன்படுத்துங்கள்’ எனப் பரிந்துரை அளித்துள்ளார்.
View this post on Instagram
மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத் இதுகுறித்து பேசும் போது, பின்வரும் பிரச்னைகள் இருந்தால், நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளார்.
1. உங்கள் தலையில் அதிகமாக வியர்வை சுரக்கிறது.
2. உங்கள் தலை பிசுபிசுப்பாக இருக்கிறது.
3. உங்கள் தலைமுடியின் பாதுகாப்புக்காக அதிகளவில் அழகுப் பொருள்களைப் பயன்படுத்துகிறீர்கள்.
4. நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது முதலான பழக்கங்களைக் கொண்டவர்.
5. உங்கள் தலையில் இறந்த செல்கள், தூசி, வியர்வை, எண்ணெய், பொடுகு ஆகியவற்றின் காரணமாக அதிகமாக அரிப்பு ஏற்படுகிறது.
இந்தக் காரணங்கள் இருப்பவர்கள் மட்டுமே தினமும் ஷாம்பூ பயன்படுத்தலாம் என மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத் பரிந்துரைத்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )