Black Fungus: ‛கருப்புப் பூஞ்சையை கொரோனாவுடன் குழப்பாதீங்க’ விளக்குகிறார் டில்லி இஎன்டி நிபுணர்!

கொரோனா வந்தாலே கூடவே கருப்புப் பூஞ்சையும் வரும் என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது. கொரோனா பாதிப்பின் போது ஸ்டீராய்டு எடுக்காதவர்களுக்கு இது பற்றிய அச்சம் தேவையற்றது.

FOLLOW US: 
சமீப நாட்களாக நாட்டு மக்களுக்கு அச்ச உணர்வைக் கடத்திக் கொண்டிருக்கிறது கருப்புப் பூஞ்சை பாதிப்பு. இது குறித்து வழக்கம்போல் சமூக ஊடகங்களில் பல்வேறு அரைவேக்காட்டுத் தகவல்கள் வெளியாக கொரோனா பீதியுடன் கருப்புப் பூஞ்சை பீதியும் எரியும் நெருப்பில் எண்ணையாகச் சேர்ந்து பற்றி எரிகிறது.

டெல்லி, குருகிராம் மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நிபுணத்துவ துறையின் தலைவரும், மருத்துவமனையின் இயக்குநரும் தலைவருமான மருத்துவர் ரவீந்திர கேரா மக்களின் அச்சத்தை நீக்கித் தெளிவு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நுணுக்கமானத் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.


Black Fungus: ‛கருப்புப் பூஞ்சையை கொரோனாவுடன் குழப்பாதீங்க’ விளக்குகிறார் டில்லி இஎன்டி நிபுணர்!

 

மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?

 

மியூகோர்மைகோசிஸ் என்பது சாதாரண வகை பூஞ்சை. இது பெரும்பாலும் மண்ணிலும், அழுகும் தாவரங்களிலும் காணப்படும். மனிதர்களைத் தொற்றுவது மிகவும் அரிது. இந்த வகைப் பூஞ்சையை நம் அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொருவருமே சர்வ சாதாரணமாக எதிர்கொள்கிறோம். இருப்பினும், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியன மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியமான சூழல்.

 

கருப்புப் பூஞ்சை பாதிப்பு இந்த காலகட்டத்தில் அதிகம் தலை தூக்கக் காரணம் என்ன? கோவிட் 19க்கும் இதற்குமான தொடர்பு என்ன?

 

கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியன மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியமான சூழல் என ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இந்த பாதிப்பில் உயிரிழப்புக்கு 50% வாய்ப்பு இருந்தாலும், கொரோனா தொற்றாளர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்போது உயிர்ப்பலிக்கான சாத்தியக் கூறு பலமடங்கு அதிகரித்துவிடுகிறது. இப்போது திடீரென இந்தத் தொற்று ஏற்படுவதற்கான காரணத்தை அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இருப்பினும் நோயாளிகளின் உடல்நிலையைப் பொருத்தும், கொரோனா பாதித்தவர்களின் வைரஸின் தீவிரம் பொருத்தும் இந்த பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது நோயாளியின் எதிர்ப்பு சக்தி குறைகிறது, லிம்போசைட்டின் அளவும் குறைகிறது. இதனால், கொரோனா நோயாளிகள் கூடுதல் ஆபத்தில் இருக்கிறார்கள். 

மேற்கத்திய நாடுகளில் கொரோனாவுக்கும் கருப்புப் பூஞ்சைக்கும் உள்ள தொடர்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் அங்கு இந்தத்தொற்று, டொர்னடோ, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடருக்குப் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

 

இந்தியாவில் சம்பீ காலமாக கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட நம் மருத்துவ கட்டமைப்பில் உள்ள சில குறைகளையே சுட்டிக் காட்டுகிறது. இதுவரை கண்டறியப்பட்ட கருப்புப் பூஞ்சை பாதிப்பு கொண்டோர் பின்னணியில் ஒரே மாதிரியான காரணிகளே இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள். சிகிச்சையில் ஸ்டீராய்டு பெற்றவர்கள். ஸ்டீராய்டு மருந்துகளை அதிகமாகவோ இல்லை தேவை ஏற்படுவதற்கு முன்னதாகவோ பெற்றவர்கள். கொரோனா பாதித்த சர்க்கரை நோயாளிகள். கொரோனாவால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள். இப்படியானவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.

 

அறிகுறிகளை எப்படி அறிந்துகொள்வது?

 

கண்களைச் சுற்றி வீக்க, தாடையில் வலி, பல் வலி, மூக்கிலிருந்து ரத்தம் கலந்த கசடு வெளியேறுதல், கடுமையான தலைவலி, கண் பார்வையில் தடுமாற்றம், திடீர் பார்வையிழப்பு ஆகியன இந்தத் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள். உடனே மருத்துவரை நாடினால் நிச்சயம் குணம் பெறலாம்.

 

மியூகோர்மைகோசிஸ் ரத்த நாளங்களில் பரவக் கூடியது என்பதால் இது நுரையீரல், தோல் மற்றும் மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். காது,மூக்கு,தொண்டை நிபுணர், கண் நோய் சிகிச்சை நிபுணர்கள் நோய்த் தொற்றை பரிசோதித்து உறுதி செய்ய முடியும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துக் கொள்வதன் மூலம் மிகவும் ஆரம்பநிலையிலேயே தொற்றை உறுதி செய்யலாம்.

 

கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின்படி ஒரு நோயாளியின் ஆக்சிஜன் அளவு 95% ஐ தாண்டி இருந்தால் அவர்களுக்கு ஸ்டீராய்டு தேவையில்லை எனக் கூறுகிறது. அதேபோல், மருத்துவரின் தகுந்த ஆலோசனை கண்காணிப்பு இல்லாமல் சுயமாக ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வது பேராபத்து எனத் தெரிவிக்கிறது. ஸ்டீராய்டு மருந்துகள் மூலம் கொரோனா சிகிச்சை பெறுவோரின் ரத்த சர்க்கரை அளவு மிகவும் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். அன்றாடம் குளுக்கோமீட்டர் கொண்டு கண்காணிப்பது அவசியம். ரத்தத்தில் ஃபெரிட்டினின் அளவு அதிகமாக இருப்பதும் கூட கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படக் காரணம்.  

 

மியூகோர்மைகோசிஸ் பாதிப்பும் சில பொய்களும்..

 

மியோகோர்மைகோசிஸ் என்பது கருப்பு நிறப் பூஞ்சையே அல்ல. கருப்புப் பூஞ்சை என்பன ஒருவகை யீஸ்ட் பேக்டீரியாக்கள். அவற்றின் செல் சுவர்களில் கருப்பு மெலனின் நிறமி இருக்கும். மியூகோர்மைகோசிஸ் திசுக்களுக்கு செல்லும் ரத்தத்தின் உயிர்க் கூறுகளை சிதைப்பதால் திசுக்களில் கருமை நிறம் ஏற்படுத்துகிறது. இதனாலேயே இதனை கருப்புப் பூஞ்சை என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

 

ஆக்சிஜன் பைப்கள், ஹூமிடிஃபையர் போன்றவற்றிலிருந்து கருப்புப் பூஞ்சை பாதிப்பு உருவகாலாம் என்பதை நிரூபிக்க எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை. கொரோனா நோய் வந்தாலே கூடவே கருப்புப் பூஞ்சையும் வரும் என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது. கொரோனா பாதிப்பின் போது ஸ்டீராய்டு எடுக்காதவர்களுக்கு இது பற்றிய அச்சம் தேவையற்றது.

 

கருப்புப் பூஞ்சை சிகிச்சை; செலவு எவ்வளவு? என்ன ஆபத்துகள் இருக்கின்றன?

 

மியூகோர்மைகாசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றன. பொதுவாக தீவிர பாதிப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. உயிரிழப்பு அபாயமும் அதிகமாக இருக்கிறது. கண்களை அப்புறப்படுத்தும் நிலை ஏற்படும்போது நோயாளிகள் பார்வை இழக்கின்றனர். ஒருவேளை இந்தப் பூஞ்சை மூளையை பாதித்துவிட்டால் மரணம் ஏற்பட 80% வாய்ப்பு அதிகமாகிறது. ஐசியூ, வென்டிலேட்டர் படுக்கைகள் அவசியமாகிறது.

இந்நோய் சிகிச்சைக்கான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் ரூ20,000-40,000 வரை உள்ளது. அன்றாடம் இவ்வளவு தொகை மருந்துக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 3 வாரங்களாவது நோயாளிகள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். பல்நோக்கு சிகிச்சை நோயாளிக்கு தேவைப்படும். 

 

எப்படி தற்காத்துக் கொள்ளலாம்?

 

மியூகோர்மைகோசிஸில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதே முதல் தடுப்பு உத்தி. கொரோனா சிகிச்சையின் போது க்ளைசிமிக் இன்டக்ஸ் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஸ்டீராய்டு பயன்பாட்டை மிக அவசியமான தேவையின்றி தவிர்க்க வேண்டும். கொரோனா நோயாளிகள் மத்தியில் ஆரம்ப அறிகுறி தென்படுகிறதா என இஎன்டி மருத்துவர்கள் மூலம் சோதித்துக் கொண்டே இருப்பது மிகமிக அவசியம்.

 

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

 

 
Tags: Corona COVID Black Fungus

தொடர்புடைய செய்திகள்

Immunity Boosting Foods | எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!

Immunity Boosting Foods | எல்லாமே மருந்து... இந்த 6 பொருளும் உங்க வீட்டு கிச்சன்ல கண்டிப்பா இருக்கணும்!

Rajapalayam Dog Interesting Facts: 'சிங்கத்தின் கர்ஜனையை ஒத்த குரைப்பொலி’ ஆக்ரோஷமான காவல்த்திறன் கொண்ட நாய்கள்..!

Rajapalayam Dog Interesting Facts: 'சிங்கத்தின் கர்ஜனையை ஒத்த குரைப்பொலி’ ஆக்ரோஷமான காவல்த்திறன் கொண்ட நாய்கள்..!

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2:  இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’  நம்மாழ்வார் வழியில்  சிவகங்கை விவசாயி !

Bra: கயிறு முதல் கார்செட்கள் வரை - ப்ரா பயன்பாட்டுக்கு முன்பு நடந்தது என்ன? : இது ப்ராக்களின் கதை (பகுதி 2)

Bra: கயிறு முதல் கார்செட்கள் வரை - ப்ரா பயன்பாட்டுக்கு முன்பு நடந்தது என்ன? : இது ப்ராக்களின் கதை (பகுதி 2)

டாப் நியூஸ்

Electricity bill Payment: மின் கட்டணம்: இன்றே கடைசி... அவகாசம் தர வாய்ப்பில்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி!

Electricity bill Payment: மின் கட்டணம்: இன்றே கடைசி... அவகாசம் தர வாய்ப்பில்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி!

தமிழ்நாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வீணடிக்கப்படும் கடற்கரை சுற்றுலா!

தமிழ்நாட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்; வீணடிக்கப்படும் கடற்கரை சுற்றுலா!

Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?

Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோயால் 2,303 பேர் பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : ஆந்திராவில் கருப்பு பூஞ்சை நோயால் 2,303 பேர் பாதிப்பு

உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.