மேலும் அறிய
Advertisement
’சுயமா சிறுநீர் கழிக்கமுடியாது, சுயமா மலம் கழிக்க முடியாது’ - உழைத்து வாழ முயற்சிக்கும் மாற்றுத்திறனாளி
'சிறுநீர் கழிக்கமுடியாத, மலம் கழிக்க முடியாத மாற்றுத்திறனாளி" - உழைத்து வாழ முயற்சி எடுத்து வருகிறார். அவரின் நம்பிக்கைக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
"பெரிய ஓட்டு வீடு, ஆனால் வீட்டிற்குள் ஒளி வர ஆயிரம் ஓட்டை. வீட்டின் சுற்றுச்சுவர்கள் மழையால் பாதிகரைந்துவிட்டது. அதுவும் எப்போது விழும் என்று தெரியாது. பெருச்சாளிகளுக்கு அடைக்கலமாகவும் இருக்கிறது வீட்டின் நிலை, வீட்டில் இருக்கும் குடும்ப நிலை அதைவிட சோகம்”.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமன்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் லெட்சுமணன் உடல் நலக் கோளாறு காரணமாக தவித்து வருகிறார். இவரது நிலையை நேரில் சென்று விசாரித்த போது சோகத்தின் உச்சத்தை ஏற்படுத்தியது. லெட்சுமணன் குடும்ப வருமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டார். கோவையில் பஞ்சர்கடையில் வேலை செய்யும் போது சக தொழிலாளியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுவிட்டது. கோமாவிற்கு போன அவர் சில வாரங்களில் நினைவு திரும்பிவிட்டார்.
ஆனால் பல வருடங்கள் உருண்டும் வாழ்க்கையில் மீள முடியவில்லை. விபத்து ஏற்பட்ட லெட்சுமணனுக்கு இடுப்புக்கு கீழ் எதுவும் வேலை செய்யாது. சிறுநீர் கழிப்பும், மலம் கழிப்பும் கூட அவரின் கட்டுப்பாடு இல்லை. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு எடுத்துக் கொள்வதே அதிகம். லெட்சுமணனுக்கு தாய் இல்லாத சூழலில் தந்தையும் ஆதரவு இல்லை. தனது சகோதரிகளின் ஆதரவில் தான் உயிர் மூச்சுவிட்டு வருகிறார். லெட்சுமணனுக்கு மூன்று சகோதரிகள். அக்காவிற்கு திருமணமான நிலையில் தங்கையில் ஒருவர் சென்னையில் பணி செய்கிறார். மற்றொரு தங்கை ஸ்நேகா கூலி வேலைக்கு சென்று வீட்டையும், லெட்சுமணனையும் பார்த்துக் கொள்கிறார். இப்படியான அவலநிலையில் தான் இருக்கின்றனர் லெட்சுமணனின் குடும்பத்தினர். லெட்சுமணனுக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை கிடைத்தாலும் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை.
லெட்சுமணன் தவழமுடியாத சூழலிலும் பூக்கட்டுவது, பஞ்சர் பார்ப்பது என முடிந்த வேலையை செய்து வருகிறார். அவருக்கு மாற்றுத்திறனாளி வாகனம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அந்த வாகனம் கிடைத்துவிட்டால் வெளியே சென்று தொழில் செய்ய முடியும் என்கிறார் லெட்சுமணன்.
படுத்த படுக்கையில் கிடக்கும் லெட்சுமணன் நம்மிடம்..." 'வீடு கட்ட வேண்டும், அக்கா தங்கச்சிகளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் தான் வேலைக்கு போனேன். ஆனால் விபத்தில் என் வாழ்க்கையே தொலைஞ்சு போச்சு. இப்ப என்னால சுயமா ஒன்னுக்கு கூட போக முடியாது. வீட்டுக்கு பாரமா இருக்கேனு தோணுது. இருந்தாலும் ஏதாவது செஞ்சு என் தங்கச்சிகள கரை சோர்க்கனும். அது தான் என்னுடைய கடைசி நம்பிக்கை. எனக்கு கவர்மெண்டு ஒரு வண்டி கொடுத்தா போதும் வேலை செஞ்சு கை கொடுத்துருவேன்" என்கிறார் தழதழத்த குரலில்.
லெட்சுமணனின் தங்கை ஸ்நேகா...,” எங்க அண்ணனுக்கு எங்கள நல்லா பார்த்துகணும்னு ஆசை. ஆனால் அத நாங்க தான் பார்த்துக்கிறோம் என்பது அது மனசுக்கு ரெம்ப கஷ்டத்த கொடுக்குது. எங்க அண்ணனுக்கு நிறைய தொழில் தெரியும். ஆனா... அதுக்கு உதவி தான் கிடைக்கல. அதுவும், எதாவது தொழில் செஞ்சுட்டா போதும், வாழ நம்பிக்கை வந்துரும். அண்ணன் தொழில் செய்ய அரசு தான் உதவி செய்யனும்” என்றபடி கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
சமூக ஆர்வலர் வில்லிப்பட்டி ராஜா...," தம்பி லெட்சுமணன் ரெம்ப நல்ல பையன். பாவம் இயலாத சூழலிலும் பஞ்சர் பார்ப்பது, பூக்கட்டுவது என எதையாவது செஞ்சு பிழைக்கிறான். நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் அதனால் என்னால் முடிந்த உதவி செய்து வருகிறேன். அவருக்கு ஒரு மாற்றுத்திறனாளி வாகனம் கிடைச்சுட்டா கூட போதும் சுயதொழில் செஞ்சு பிழைச்சுக் கொள்வான்" என்கின்றார்.
'சிறுநீர் கழிக்கமுடியாத, மலம் கழிக்க முடியாத மாற்றுத்திறனாளி" - உழைத்து வாழ முயற்சி எடுத்து வருகிறார். அவரின் நம்பிக்கைக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion