குறைந்த செலவில் தொலைதூர தனிப்பயணம்: திட்டம் இருந்தால் இதை தெரிஞ்சிகோங்க!
பகல் நேரத்தில் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு சென்று விடுங்கள். கையில் சிறிது பணம் எப்போதும் வைத்திருங்கள்.
தனியாகப் பயணங்கள் செல்வது பலரது கனவு. ஆனால், பொருளாதார காரணங்கள் பலரையும் படி தாண்ட விடாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால், குறைந்த செலவில் முடிந்துவிடும் பயண முடிவுகள் இந்தியாவில் நிறையவே இருக்கின்றன.
- கோகர்ணா
கர்நாடகாவில் அமைந்திருக்கும் இந்த இடம் சூரியக் கடவுள் தோன்றிய இடம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது வழிபாட்டிற்கான இடமாக மட்டும் அல்லாமல் அழகான கடற்கரைகள் குவிந்திருக்கும் இடமாகவும் இருக்கிறது. நீர் விளையாட்டுகளுக்கான வசதியும் இங்கு இருக்கிறது.
- கசோல்
ஹிமாச்சல பிரதேசத்தில் அமைத்திருக்கும் அழகிய கிராமம் இது. மலைகளும் காடுகளும் கொஞ்சும் இடம் இது. அமைதி வேண்டும் என்பவர்கள் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மற்றொரு கிராமமான மலானாவிற்கு செல்லலாம்.
- உதய்பூர்
கண்களால் அள்ள முடியாத அழகிய கட்டிடங்கள், கைவினைத் தளங்கள், அரண்மனைகள் நிறைந்த ஊர் இது. மேலும், அழகிய ஏரிக் கரைகளில் நின்றுகொண்டு அரிதான அரண்மனைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கண்டு மகிழலாம்.
- ஹம்பி
வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம் இது. 500 வரலாற்றுப் பெருமை வாய்ந்த கட்டிடங்கள் இங்கு உள்ளன.
- கட்ச்
ஹரப்பா நாகரிகத்தின் மிச்சங்களை இங்கு காணலாம். அரிதான வரலாற்றுத் தளம் இது.
தனியாக செல்லும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:
நிறைய சுமைகளை எடுத்துச் செல்லாதீர்கள். மிகவும் அவசியமான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்லுங்கள்.
பகல் நேரத்தில் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு சென்று விடுங்கள்.
கையில் சிறிது பணம் எப்போதும் வைத்திருங்கள்.
முக்கியமான ஃபோன் எண்களை கையில் வைத்திருங்கள்.
விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள்.
போதையுடன் பயணிக்க வேண்டாம்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்