இந்த உணவையெல்லாம் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது உயிருக்கே உலை வைக்கும்: எந்தெந்த உணவு தெரியுமா?
சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் போது அது உடல் நலனிற்கு கெடுதல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறான உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
நம்மில் ஏராளமானோர் சாப்பிட்டு மீதமான உணவை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது வழக்கம். உணவை வீணாக்க விரும்பாததால் அதை சூடு படுத்தி உண்ணும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. சூடாக சாப்பிட வேண்டியது நல்ல விஷயம் தான் என்றாலும் சில உணவுகளை மீண்டும் சுட வைத்து சாப்பிடும் போது ஃபுட் பாய்சன் ஆகி அவை பல வித ஆபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த உணவு வகைகளை பற்றி இங்கே பார்க்கலாம்:
சிக்கன்
இதில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. சிக்கன் சாப்பிட்டால் அது செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். இதை இரண்டாவது முறை சூடுபடுத்தி சாப்பிடும் போது அது ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்புள்ளது. சிக்கன் மட்டும் மட்டும் இல்லாமல் பொதுவாகவே அனைத்து வகை இறைச்சிகளையுமே சூடு செய்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது.
கீரை
கீரையில் அதிகப்படியான நைட்ரேட் மற்றும் இரும்பு சத்து இருக்கிறது. எனவே கீரையை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது குடல் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதால் உடலில் தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
முட்டை
வேகவைத்த அல்லது வறுத்த முட்டைகள் எதுவாக இருந்தாலும் கட்டாயம் மீண்டும் சூடுசெய்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முட்டைகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதால், அவை நச்சுத்தன்மையுடையதாக மாற வாய்ப்புள்ளது. இது செரிமானப் பாதையில் பிரச்சனைகள் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அஜீரணக் கோளாறு மற்றும் வாயு தொல்லையை உண்டாக்கும். அதோடு முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு புரதச் சத்து கிடைக்கும். ஆனால் முட்டையை மீண்டும் சூடு படுத்தும் போது, அவற்றிலுள்ள புரதங்கள் உடைந்து அழிய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரிசி சோறு
நாம் அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவுப் பொருள் இதுதான். இதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது நச்சுத்தன்மை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அரிசி சாதத்தை சமைத்து கொஞ்சம் நேரத்திலேயே சாப்பிடுவது தான் நல்லது. அதை குளிர்வித்து, மீண்டும் சூடுசெய்யும்போது அதந்த பாக்டீரியாக்களில் உள்ள நுண் கிருமிகள் உற்பத்தி பெருகி, அழிந்து அதற்குள்ளேயே தங்க வாய்ப்புள்ளது. எனவே சாதத்தை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
காளான்
காளானை பொதுவாக சமைத்தவுடன் சாப்பிட்டு விடுவது நல்லது. இதை தாமதமாக சாப்பிடுவதே நல்லது இல்லை. அப்படி இருக்கும்போது மீண்டும் சூடு படத்தை சாப்பிடுவது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என சொல்லப்படுகிறது.