Jackfruit Chips: சுவையான பலாக்காய் சிப்ஸ்.. மொரு மொரு சுவையில் செய்வது எப்படி..?
மொரு மொரு பலாக்காய் சிப்ஸ் எப்படி ஈசியா தயாரிக்குறதுனு பார்க்கலாம் வாங்க.
ஒவ்வொரு சிப்ஸ்சும் ஒவ்வொரு சுவையை கொண்டிருக்கும். பொதுவாக சிப்ஸ் என்றால் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். அதன் சுவை தான் அதற்கு காரணம். குறிப்பாக குழந்தைகளுக்கு மற்ற தின்பண்டங்களை காட்டிலும் சிப்ஸ் மிகவும் பிடித்தமானது. அதன் கரக் முரக் சத்தத்துடன் கூடிய க்ரிஸ்பினஸ் கூட இதற்கு முக்கிய காரணம். ஆனால் நாம் கடைகளில் எண்ணெயில் பொரித்த பொருட்களை வாங்க தயங்குவதற்கு முக்கிய காரணம் பொரிக்க பயன்படுத்தும் எண்ணெயின் தரம் குறித்த பயத்தினால் தான்.
அதனால் தான் சில பெற்றோர் சிப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். பலாக்காய் சிப்ஸ் சுவையாகவும் ஈசியாகவும் எப்படி செய்யுறதுனு தான் இப்போ நாம பார்க்க போறோம்.
.தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் பலாக்காயில் இருந்து பலாச்சுளைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பலாச்சுளையில் இருக்கும் கொட்டையை அகற்றி விட்டு, சுளையை ஒரே மாதிரியான அளவில் நீளவாக்கில் மெல்லிதாக கொள்ள வெட்டிக்கொள்ள வேண்டும்.