மேலும் அறிய
Advertisement
Diet Mistakes: டயட் எடுத்து கொள்பவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!
Common Diet Mistakes: டயட் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட உணவை எடுத்து கொள்ள கூடாது. டயட் எடுத்து கொள்வது, உடலுக்கும் ஆரோக்கியமானதாகவும், மனதுக்கு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்
டயட் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட உணவை எடுத்து கொள்ள கூடாது. டயட் எடுத்து கொள்வது, உடலுக்கும் ஆரோக்கியமானதாகவும், மனதுக்கு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சில டயட் முறைகள் எடுத்து கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமலும், போதுமான அளவு எடுத்து கொள்ளாமலும், ஏதாவது ஒரு குறையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
சில நேரங்களில் எடுத்து கொள்ளும் டயட் முழுமையாக பயன் தராமலும் இருக்கும். டயட் எடுத்து கொள்ளும் போது பொதுவாக நடக்கும் தவறுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
- நின்று கொண்டு உணவை எடுத்து கொள்வது- நின்று கொண்டு சாப்பிடும் போது , வேகவேகமாக, உணவை மெல்லாமல் அப்டியே விழுங்கும் பழக்கம் ஏற்படும். அப்டியே உணவை விழுங்குவது, உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்காமல் இருக்கும். உணவு எப்போதும் அமர்ந்து ரிலாக்ஸாக முழுமையா மென்று விழுங்க வேண்டும். அப்போது தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். நின்று கொண்டே எந்த டயட் எடுத்து கொண்டாலும், தீர்வு முழுமையாக இருக்காது.
- கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் - சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவ வேண்டும். இது கையில் இருக்கும் கிருமிகள் உணவுடன் சேர்த்து உடலுக்கு செல்வதை தடுக்கும். சுத்தமாக இருபவது அவசியம். சில கைகளை கழுவாமல் உணவு எடுத்து கொள்வார்கள்
- குளிர்ந்த நீர் - சாதாரணமாக தண்ணீர் குடித்தால் தாகம் தீர்ந்தது போன்று உணர்வு ஏற்படாது. அதனால் பிரிட்ஜில் தண்ணீரை வைத்து, எடுத்து குடித்து பழகி இருப்பார்கள். இது தவறான உணவு பழக்கம். மிகவும் குளிர்ந்த நீரை எடுத்து கொள்ளும் போது , செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குளிர்ந்த நீர் செரிமான ஆவதற்காக சுரக்கும் அமிலங்களை குறைத்து விடும். அதனால் குளிர்ந்த நீரை தவிர்த்திடுங்கள்.
- தவறான உணவு சேர்க்கை - டயட் என்று சில உணவுகளை சேர்த்து எடுத்து கொள்ளும் பழக்கம் இருக்கும். இரண்டு ஆரோக்கியமான உணவுகளை ஒரே நேரத்தில் எடுத்து கொள்ளும் போது சரியான ஊட்டச்சத்தாக இருக்காது. தேன் உடன் நெய் சேர்த்து கொள்வது, பழங்கள் உடன் முட்டை சேர்த்து கொள்வது, முலாம் பழம் மற்றும், தர்பூசணியுடன் பால் சேர்த்து கொள்வது, எலுமிச்சையுடன் வெள்ளரிக்காய் சேர்த்து கொள்வது, தவறான உணவு சேர்க்கை ஆகும். இதை தவிர்க்க வேண்டும். எந்த உணவுடன் எதை சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.
- போதுமான அளவு கொழுப்பு எடுத்து கொள்ளாமல் இருப்பது -உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் போதுமான நல்ல கொழுப்பு எடுத்து கொள்ள மாட்டார்கள். உடலுக்கு தினம் கொழுப்பு சத்து அவசியம். எந்த கொழுப்பை
- தவிர்க்க வேண்டும் என்று தெரியாமல் கொழுப்பு சத்து உணவுகள் அனைத்தையும் தவிர்த்து விடுகின்றனர். இது டயட் எடுத்து கொள்பவர்கள் செய்யும் தவறு.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion