மேலும் அறிய

Weight loss Tips: படிக்கட்டுகளில் ஏறுவது, நடைபயிற்சி! இரண்டில் எது பெஸ்ட் - நிபுணர்கள் சொல்வதென்ன?

Weight loss Tips: உடற்பயிற்சி செய்ய தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இன்றைய வாழ்க்கை முறையில் உடலியக்கம் குறைவிட்டதாகவும் உடற்பயிற்சிக்கு என தனியாக நேரத்தை ஒதுக்காமல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடற்பயிற்சி:

உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றங்கள் உள்ளிட்டவைகளின் காரணமாக உடல் எடை அதிகரித்திருந்தால், குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் அதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் அதற்கு மாற்றாக வேறு வழிகளை காண தேட வேண்டும். கிடைக்கும் வழிகளில் என்னென்ன உடற்பயிற்சி செய்யலாம் என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்கிங்:

தொலைபேசியில் பேசும்போது நடப்பது, உங்கள் அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறுவது, உங்கள் நாயுடன் வாக்கிங் செல்வது,  வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக மிக அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வது போன்ற சின்ன சின்ன செயல்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தவும் எடையைக் குறைக்கவும் உதவும். இது உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிவதற்கு உதவியாக இருக்கும். 

படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் நடைபயிற்சி, நான் எதை தேர்வு செய்ய வேண்டும்? என்று கேள்வி எழும் நபர்களுக்கு நிபுணர்கள் சொல்லும் பதில், உங்கள் உடற்பயிற்சி நிலை, உடல்நலப் பிரச்சினைகள் அல்லது உங்கள் ஆர்வத்தைப் பொறுத்து அவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டையும் நீங்கள் தேர்வு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது கலோரிகளை குறைக்க உதவும். ஆனால், உந்த உடற்பயிற்சி உங்களுக்கு சோர்வை அளித்தால் உங்களுக்கு ஏற்றதை தெரிவு செய்யுங்கள். நிச்சயமாக நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சியாகும்.

படிக்கட்டுகளில் ஏறும் உடற்பயிற்சி ஆரோக்கியமானதா?

படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல  இதயத்திற்கும் நல்லது. படிக்கட்டுகள் ஏறும்போது கால்கள் மற்றும் தசைகள் அதில் பங்கேற்கும். இது இதயத் துடிப்பை உயர்த்தி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் முழுவதும் சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

படிக்கட்டுகள் ஏறுவது குறித்து மருத்துவர் நசிருதீன் கூறுகையில், " உடற்பயிற்சி குறித்து உங்கள் தேர்வு. எந்த உடற்பயிற்சியை தெரிவு செய்கிறீர்கள் என்பது உங்கள் உடல்நலன் தொடர்பானது. படிக்கட்டு ஏறுதல் மற்றும் நடைபயிற்சி இரண்டையும் கூட செய்யலாம். படிக்கட்டுகள் ஏறுவது உடலின் மெட்டாபாலிசத்தை சீராக இயங்க வைக்கும். தசை வளர்ச்சி அடையும். கூடவே உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உதவும்.”என்று தெரிவிக்கிறார்.

உடற்பயிற்சி செய்ய தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஆஷிஸ் செளத்ரி. 

பணி சூழல், அவசரமான வாழ்வியல் முறை ஆகியவற்றின் காரணமாக உடற்பயிற்சி யோகா உள்ளிட்டவைகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது எளிதானதாக இருக்காது. இருப்பினும், அதை பழக்கப்படுத்த வேண்டும். காலையில் எழுந்து விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். மாடிப் படி இருந்தால் அதில் ஏறி இறங்கலாம். 

படிக்கட்டுகளில் ஏறி செய்யும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள். 

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்:

படிக்கட்டுகளில் ஏறி, இறங்கும்போது உங்களின் முட்டிக்கால், நெஞ்சு பகுதியில் உள்ள தசைகள் நன்றாக இயங்கும். இது ’standing crunches’ செய்வது போல. தொடர்ந்து செய்தால் தசை வலுப்பெறுவதுடன் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு குறையும். உடலின் கீழ் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும். 

வளர்சிதை மாற்றம் மேம்படும்:

உடலின் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு வளர்சிதை மாற்றத்திற்கும் இது நல்லது . நடைப்பயிற்சி எவ்வளவு நல்லதோ அதே அளவு படிக்கட்டுகளில் ஏறி உடற்பயிற்சி செய்வது நல்லது. 

செரிமான திறனை தூண்டுகிறது

இந்த முறை உடற்பயிற்சியால் கலோரி எரிக்கப்படுகிறது. அடிவயிற்றில் உள்ள தசைகளை நன்றாக செயல்பட தூண்டுவதால் செரிமான தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. 

நடைபயிற்சி

எல்லாரும் நடைப்பயிற்சி செய்யலாம். ஏனெனில், சிலருக்கு படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் உடற்பயிற்சி செட் ஆகாது. வயதானவர்கள், மூட்டு பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல. மேலும் படிக்கட்டுகளில் ஏறுவதால் சோர்வாக உணர்ந்தால் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். எந்தவொரு உடல் செயல்பாடும் எண்டோர்பின்களை வெளியிடுவதற்கு வழிவகுக்கிறது.  மன அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. எதையேனும் தொடர்ச்சியாக செய்வது உடல்நலனுக்கு நல்லது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
Embed widget