மேலும் அறிய
Advertisement
Chicken Kurma: சிக்கன் குருமா எப்படி செய்வது? இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பர் சைடிஷ்!
இட்லி, தோசை, சாப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன். சுவையான சிக்கன் குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றிற்கு ஒரே மாதிரியான சைடிஷ் சாப்பிட்டு அளுத்து விட்டதா? புதியதாக எதையேனும் சாப்பிடனும் போல இருக்கா? சூப்பரான சிக்கன் குருமா இருந்தா இந்த மூன்று உணவுகளுக்கும் சுவையான சைடிஷ் ரெடி. மிக எளிமையாக இந்த சிக்கன் குருமாவை செய்து விட முடியும். இந்த சிக்கன் குருமாவின் சுவை அலாதியாக இருக்கும். வாங்க சுவையான சிக்கன் குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 ( நறுக்கியது)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 1/2 டீஸ்பூன்
முந்திரி - 3
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பூண்டு - 6 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி கொள்ள வேண்டும். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தனியா வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 5 நிமிடம் வதக்கி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும். பிரஷர் அடங்கிய பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் குருமாவில் கொத்தமல்லியைத் தூவினால் சிக்கன் குருமா தயார்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion