Akhil Mishra : மரணம் இப்படியா வரனும்... 3 இடியட்ஸ் படத்தின் பிரபல கதாபாத்திரமான அகில் மிஷ்ரா திடீர் மரணம்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தின் பிரபல கதாபாத்திரமான அகில் மிஷ்ரா தீடீர் விபத்தில் உயிரிழந்துள்ள தகவல் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
![Akhil Mishra : மரணம் இப்படியா வரனும்... 3 இடியட்ஸ் படத்தின் பிரபல கதாபாத்திரமான அகில் மிஷ்ரா திடீர் மரணம். alkhil mishra famous librarian character from amir khan three idiots movie passes away in accident Akhil Mishra : மரணம் இப்படியா வரனும்... 3 இடியட்ஸ் படத்தின் பிரபல கதாபாத்திரமான அகில் மிஷ்ரா திடீர் மரணம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/21/bebf7353cd397f6f7d08e3940c8264df1695282775466572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் பிரபல கதாபாத்திரமான அகில் மிஷ்ரா (56) தீடீர் விபத்தில் உயிரிழந்துள்ள தகவல் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
3 இடியட்ஸ்
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளியாகியத் திரைப்படம் 3 இடியட்ஸ். அமீர்கான், மாதவன், கரீனா கபூர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நைத்திருந்தார்கள். மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் கவணம் பெற்றது. அதிலும் குறிப்பாக கல்லூரி நூலகராக தூபே என்கிற அகில் மிஷ்ரா நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தனித்த இடம் பிடித்தது. நகைச்சுவை கலந்த அப்பாவியான உடல்மொழியை தனது நடிப்பில் அகில் மிஷ்ரா வெளிப்படுதியது ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான பிரபல கார்ட்டூன் ஒன்றிலு வரும் ஆசிரியர் கதாபாத்திரத்திற்கும் துபே என்று பெயர் வைக்கும் அளவிற்கு அகில் மிஷ்ராவின் கதாபாத்திரம் புகழ்பெற்றது.
"Remembering the versatile actor Akhil Mishra (DUBEY JI), whose impactful portrayal in '3 Idiots' touched hearts worldwide. His talent left an indelible mark on the cinema.May his soul RIP🕊🌻#Kareenakapoor #KareenaKapoorKhan #AnilKapoor #SaraAliKhan #Ghost #Atlee pic.twitter.com/QCyRF2UKCC
— Him Again (@viratagain) September 21, 2023
கடந்த 2012 ஆம் ஆண்டு நண்பன் என்கிறப் பெயரின் ஷங்கர் இந்தப் படத்தை ரீமேக் செய்தார். விஜய் ஜீவா, ஸ்ரீகாந்த் இலியானா எஸ்.ஜே சூரியா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். அகில் மிஷ்ரா நடித்த தூபே கதாபாத்திரத்தை போஸ் என்கிற கதாபாத்திரம் மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா நடித்திருந்தார்.
எதிர்பாராத விபத்து
அகில் மிஷ்ரா இன்று தனது வீட்டில் சமயலறையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கால் நழுவி சரிந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அகில் மிஷ்ராவின் மனைவியான சூஸன் பெர்னர்ட் இந்தத் தகவலை அறிந்து உடனே தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அகில் மிஷ்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ள நிலை அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கப் பட்டுள்ளன. தனது கணவனின் எதிர்பாராத இந்த மரணம் குறித்து தெரிவித்த சூஸன் “ என்னுடைய மனம் உடைந்து விட்டது. என்னுடைய ஒரு பாதி இல்லாமல் போய்விட்டது “ என்று கூறியுள்ளார். அகில் மிஷ்ராவின் இறுதி சடங்குகள் குறித்த கூடிய தகவல்கள் இன்னும் வெளியாக இருக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)