World Breastfeeding Week 2023: வேலைக்குச் செல்லும் தாய்மார்களா நீங்கள்? குழந்தைக்கு பாலூட்ட இதோ டிப்ஸ்..!
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட பின்பற்ற வேண்டிய டிப்ஸ் குறித்துப் பார்க்கலாம்.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும் என்பதை அறிந்திருந்தும், வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது சற்று சவாலான காரியம் தான். சமூக விதிமுறைகள் மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் வேலை செய்யும் தாய்மார்களை மிக விரைவில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் நிர்பந்தத்திற்கு தள்ளலாம்.
தாய்ப்பால்:
இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், வேலை செய்யும் தாய்மார்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதில் வேலை-வாழ்க்கை சமநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட சில டிப்ஸ்கள்பறிந்துரைக்கப்படுகிறது.
- தாய்ப்பால் அட்டவணையை அமைக்கவும்.
- வேலைக்குச் செல்வதற்கு முன்பும், வேலையில் இருந்து திரும்பிய உடனும் குழந்தைக்கு பாலூட்டலாம். நீங்கள் வேலையிலிருந்து திரும்பும் நேரத்தில் வேறு பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டாம் என முன்கூட்டிய வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்தலாம்.
- பாட்டில் வழியாக குழந்தைக்கு பாலூட்டுவதை வழக்கப்படுத்தலாம். வேலைக்கு செல்வதற்கு முன் வீட்டில் இருக்கும் நேரத்தில் குழந்தைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பாலூட்டலாம்.
- பாதுகாப்பான மருந்துகள், பால் சேமிப்பு முறை, தாய்ப்பாலூட்டுதல் , வேலைக்குச் செல்லுதல் ஆகியவற்றைப் பற்றி நாமே திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
- நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாலூட்டுவதற்கான பிரத்யேக இடம் உள்ளதா? வேலை நேரத்தில் பாலூட்டும் இடைவெளிகளைப் பற்றி முன்கூட்டியே உங்கள் நிறுவனத்தில் பேசுங்கள்.
- பணியிடத்திற்கு அருகில் குழந்தை பராமரிப்பு/குழந்தைகள் காப்பகத்தைத் தேடுங்கள், மேலும் உங்கள் குழந்தைக்கு உணவளிக்க வேலையின் இடையில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
- மிகவும் தேவையான ஊக்கம் மற்றும் உதவியுடன் உங்களுக்கு உதவக்கூடிய வலுவான ஆதரவு நெட்வொர்க்கை உருவாக்குங்கள்.
- நாள் முழுவதும் நன்கு நீரேற்றமாக உங்களை வைத்துக் கொள்ளுங்கள்.
தாய்ப்பால் ஒரு ஆரோக்கியமான உணவு. மேலும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்க உதவுகிறது. ஆரம்பத்தில் குழந்தைக்கு பாலூட்டுதல் சவாலாக தோன்றினாலும் நாளடைவில் திறம்பட கையாள முடியும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
மேலும் படிக்க,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் புலி வருது... புலி வருது கதை தான் - எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்
Senthil Balaji: ’5 நாட்கள் அனுமதி’ - அமலாக்கத் துறை விசாரணைக்கு செல்லும் செந்தில் பாலாஜி..!