வெயிட் குறைக்குணுமா? இருக்கு 80/20 ஃபார்முலா.! இனி இப்படி ஃபாலோ பண்ணுங்க!
எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் ஒரு டயட் எடுத்து கொண்டு இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை விட்டுவிட்டு பிடிக்காத உணவுகளை எடுத்து கொள்ளும் சூழல் இருக்கும்.
எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் ஒரு டயட் எடுத்து கொண்டு இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை விட்டுவிட்டு பிடிக்காத உணவுகளை எடுத்து கொள்ளும் சூழல் இருக்கும். என்றாவது ஒரு நாள் இந்த டயட் பிடிக்காமல் பிடித்த உணவுகளை ஒரே நாளில் அதிகமாக எடுத்து கொள்வார்கள். இதனால் இவ்வளவு நாள் பின்பற்றிய டயட் முறையால் எந்த
பயனும் இல்லாமல், உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்து விடும்.இது உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் எதிர் கொள்ளும் பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு ஊட்டச்சத்து நிபுணர், நிமாமி அகர்வால் அவர்கள் ஒரு 80/20 விதியை அறிமுக படுத்தி இருக்கிறார். இந்த விதியை பற்றி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
டயட் எடுத்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் எடுத்து கொள்ளாமல், உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்து கொள்ள வேண்டும். 80/20 விதியும் அதையே தான் பரிந்துரைக்கறியாது. 80 சதவீதம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளவும், 20 சதவீதம் பிடித்தமான உணவுகளை எடுத்து கொள்ளவும் இது பரிந்துரை செய்கிறது. இது போன்று எடுத்து கொள்ளும் போது நிலையான ஆரோக்கியமான உணவை நீண்ட நாட்களுக்கு எடுத்து கொள்ள முடியும். அதனால் ஆரோக்கியம் மேம்படும். அதே சமயத்தில் நிலையாக எடையும் குறையும்.
View this post on Instagram
நிமாமி அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பல்வேறு பரிந்துரைகள் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
ஆரோக்கியமான வாழ்வியல் முறை , ஊட்டச்சத்து மிக்க உணவுகள், உடற்பயிற்சி என பல்வேறு தகவல்களை பரிந்து வருகிறார்.