Morning Breakfast : 8 மணிக்கே காலை உணவை முடிச்சிடணும்னு இந்த ஆய்வு சொல்லுது.. ஏன் தெரியுமா?
Early Breakfast : சமீபத்திய ஆய்வு ஒன்று, உங்களின் காலை உணவு நேரமும், இரவு உணவு நேரமும் உங்களின் இதய நலத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்திருப்பது பலரின் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது
Early Breakfast : Journal Nature Communications நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று, உங்களின் காலை உணவு நேரமும், இரவு உணவு நேரமும் உங்களின் இதய நலத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்திருப்பது பலரின் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.
இரவு உணவை தாமதாக உண்ணக்கூடாது எனவும், சீக்கிரமாக இரவு உணவை முடித்துவிடவேண்டும் எனவும், இதுவும் இதய நலனுக்கான மிக முக்கிய காரணி எனவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
உணவு முறை, உணவு எடுத்துக்கொள்ளும் நேரம், இதய நலன் ஆகிய மூன்றுக்கும் இடையிலான தொடர்புதான் இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதய வால்வு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, இதய குறைபாடுகள் ஆகியவற்றில் இவை எந்த அளவுக்கு பங்கு வகிக்கின்றன என்பதை குறித்தும் இந்த ஆய்வு ஆராய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. காலை உணவை 8 மணிக்கு சாப்பிடுபவரை விட, காலை உணவை 9 மணிக்கு முடிப்பவருக்கு, 6 சதவிகிதம் இதய நோய்க்கான அபாயம் அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அதைப்போலவே 8 மணிக்கே இரவு உணவை முடித்துக்கொள்பவரை விட, தாமதமாக உணவு உட்கொள்பவர்களுக்கு 28 சதவிகிதம் இதய நோய்க்கான அபாயம் அதிகமாக இருப்பதாகவும் இக்குழு தெரிவித்துள்ளது.
இதய நலனை சீராக வைத்துக்கொள்வதில், காலை உணவை சீக்கிரமாகவும், இரவு உணவை சீக்கிரமாகவும் முடிப்பது மிக முக்கியமான பலனை அளிக்கும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரையாக உள்ளது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )