Ratan Tata: வாவ்.. உலகமே வியக்கும் டாடா.. ரத்தன் டாடாவிடம் இருக்கும் மிக காஸ்ட்லியான விஷயங்கள் இவைதான்..
ரத்தன் டாடாவிடம் இருக்கும் 5 காஸ்ட்லி விஷயங்கள் பற்றிய தொகுப்பு இது!
இந்தியாவின் வளர்ச்சியிலும், நாட்டில் அனைத்து துறைகளிலும் புதுமையானவற்றை அறிமுகப்படுவத்திலும் டாடா நிறுனவத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு வித்திட்டவர், டாடா குழுமங்களின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (Ratan Tata). ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. டாடா தடம் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். டாடா சாம்ராஜியத்தை உருவாக்கிய ரத்தன் டாடாவிடம் இருக்கும் ஐந்து காஸ்ட்லி விஷயங்கள் தொகுப்பு இதோ. தெரிந்து கொள்ளுங்கள்.
ஃபெராரி கலிஃபோர்னியா (Ferrari California)
உலக அளவில் மிகவும் பிரபலமான கார் மாடல் ஃபெராரி. இது சிறப்பான செயல்திறனுக்கு பெயர்போன ஒன்றாகும். அதாவது ஃபெராரி காரின் பர்ஃபாமென்ஸ் டாப் க்ளாஸ். பல்வேறு வசதிகளுடன் கூடிய சிவப்பு நிற ஃபெராரி கார் ரத்தன் டாடாவிடம் இருக்கிறது. இதை வாங்குவதகு முன்னர், இந்த ஃபெராரி கலிஃபோர்னியா மாடலில் இன்னும் பல சிறப்பம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை சுமார் ரூ.3.45 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபால்கன் ஜெட் (Falcon Private Jet)
இந்தியாவிலேயே முதன் முதலாக ஃபால்கன் 16 (F-16 Falcon) ரக ஜெட்டை இயக்கிய தனிநபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ரத்தன் டாடா. இவரிடம் ஃபால்கன்-16 ரக ஜெட் விமானம் இருக்கிறது. இந்நிறுவனம் ரத்தன் டாடாவின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த ஃபால்கம் ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதில் ஓய்வெடுக்கும் அறை, குளியல் அறை, மீட்டிங் அறை உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஃபால்கன் ஜெட் விமானத்தை தனியாக ரத்தன் டாடாவே இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசார்ட்டி க்வார்ட்ரோபோர்டே (Maserati Quattroporte)
எழிலோடு வடிவமைக்கப்படுள்ள இந்த Maserati Quattroporte கார் ரத்தன் டாடாவுக்கு மிகவும் பிடித்தமான கார். இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இந்த ரக கார்கள், உயர்தர மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். ஃபெராரியை விட இந்த மாசார்ட்டி க்வார்ட்ரோபோர்டே காரை ஓட்டுவதே ஜாலியாக இருக்கும் என்கிறார் ரத்தன் டாடா. இந்தக் காரின் விலை 100,000 அமெரிக்க டால்ர்கள் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு, 4.7 நொடிகளிலேயே 0-60 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
ஜாகுவார் எக்ஸ்.எஃப்.- ஆர் (Jaguar XF-R)
ஜாகுவார் Jaguar XF-R ரக செடான் கார் சந்தையில் மிகவும் பிரபலமானது. குறைந்த நொடிகளிலேயே இந்த கார் அதிவேகத்தில், அதாவது 100 எம்.பி.ஹெச். வரை செல்லக் கூடியது. இந்த காரின் உட்புறமும் உயர்தர லெதரால் தயாரிக்கப்பட்டதாகும். மேலும், அதிவேகத்திற்க்கு பெயர்போன இந்த காரின் விலை 40,000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்தன் டாடாவின் பிரம்மாண்டமான வீடு
மும்பையில் வீடு வாங்கவேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். கடல் பார்த்த வீடு ரத்தன் டாடாவினுடையது. ஆம், 14,000 சதுரடி பரப்பளவில் அமைந்திருக்கிறது ரத்தன் டாடாவின் பிரம்மாண்டமான வீடு. இவரின் வீடு ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாகும். தோட்டத்துடன் அமைந்திருக்கும் தனி வீட்டில், ஜிம், நீச்சல் குளம், சூரிய வெளிச்சம் படும்படியான மாடி உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்