வெட்கத்தை அழகாக்க 5 க்ரீம் ப்ளஷ்கள் இருக்கு... இதை ட்ரை பண்ணுங்க!
நம் முகப் பொலிவை அதிகரிக்க ஒரு சின்ன டச் அப் போதும் என்றால் அதை ப்ளஷ் தான் சிறப்பாகச் செய்யும்.
நம் முகப் பொலிவை அதிகரிக்க ஒரு சின்ன டச் அப் போதும் என்றால் அதை ப்ளஷ் தான் சிறப்பாகச் செய்யும்.
டல்லான முகத்தை பளிச்சென ஆக்குவதாக இருக்கட்டும். இல்லை ஏற்கெனவே பளிச்சென இருக்கும் முகத்தை கெத்தாகக் காட்டுவதாக இருக்கட்டும், ப்ளசுக்கு ஈடு வேறில்லை. க்ரீம் பேஸ்ட் ப்ளஷ்கள் சந்தையில் ஏராளமாக இருந்தாலும் எதைத் தேர்வு செய்வது என்பதில் நமக்குக் குழப்பம் இருக்கும்.
உங்களுக்காக சில பரிந்துரைகள்:
1. நிக்ஸ் காஸ்மெடிக்ஸ் ஸ்டிக் ப்ளஷ்
Nyx Cosmetics Stick Blush Tea Rose இந்த வகை ப்ளஷ் க்ரீம் பேஸ் ஃபார்முலேஷன் கொண்டது. இது மென்மையான தோற்றப் பொலிவைத் தருகிறது. இதில் உள்ள அடர்த்தியான பிக்மென்டேஷன் உறுதியான பூச்சைத் தரும். இதை பூசிக்கொள்வது மிகவும் எளிதானது. இதை அமேசானில் ஆஃப்ரில் ரூ.2660க்கு வாங்கலாம். ஒரிஜினல் விலை ரூ.4,999.
2. ரூபீஸ் ஆர்கானிக்ஸ் க்ரீம் ப்ளஷ்
Ruby's Organics Creme Blush இதுவும் க்ரீம் பேஸ்ட் ப்ளஷ் தான். இது மென்மையான துல்லியமான ஃபினிஷைத் தரும். ஜோஜோபா எண்ணெய் மற்றும் ஷீ வெண்ணெய் கலவையால் செய்யப்பட்டது. இது இயற்கையான பொலிவை போன்றதொரு லுக்கை தரும். இதன் விலை அமேசானில் ரூ.1045. ஒரிஜினல் விலை ரூ.1100.
3. சுகர் ஃபேஷ் ஃபார்வர்டு ப்ளஷ் ஸ்டிக்
Sugar Face Fwd Blush Stick இந்த வகை ப்ளஷ், அடர்த்தியானது. மேட் ஃபினிஷ் லுக் தரும். பூசிக் கொள்வது மிகவும் எளிதானது. இது ஸ்டிக் ப்ளஷ் வகையிலானது. அமேசானில் இதன் விலை ரூ.719. இதன் ஒரிஜினல் விலை ரூ.799.
4. சேம்பர் ஒரோஸா மேட் ப்ளஷ் ஸ்டிக்
Chambor Orosa Matt Blush Stick இந்த வகை ப்ளஷ், துல்லியமான மேட் ஃபினிஷ் தரும். இது க்ரீஸ் ஃப்ரீ என்பது கூடுதல் சிறப்பு. அதனால் பூசிக் கொண்டதே தெரியாத அளவில் லைட் வெயிட்டாக இருக்கும்.
5. ரெவ்லான் இன்ஸ்டா பிளஷ் ஸ்டிக்:
Revlon Insta-Blush Stick இந்த வகை ரெவ்லான் ப்ளஷ் ஸ்டிக் ஃபார்மட்டில் வருகிறது. இது மென்மையான பூச்சைக் கொடுக்கக் கூடியது. இதன் விலை அமேசானில் ரூ.1084. ஒரிஜினல் விலை ரூ.1100.
விதவிதமான ப்ளஷ்களைப் பயன்படுத்தி உங்கள் அழகுக்கு அழகு சேருங்கள். இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வகையான ப்ளஷ்களும் க்ரீம் பேஸ்ட் ப்ளஷ்கள் என்பது சிறப்பம்சம்.